» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தில் கனமழை : பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
வெள்ளி 26, செப்டம்பர் 2025 10:13:17 AM (IST)
கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் (செப். 26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று காலை முதல் சாரல் மழை பெய்து வந்த நிலையில், இரவில் கனமழை பெய்யத் தொடங்கியது. இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக நாகர்கோவில் நகரப் பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், இன்றும் மழை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், குமரியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திற்பரப்பில் 180 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறையில் 140 மி.மீ, கோதையாறில் 130 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதனிடையே, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜன.16, 26ஆம் தேதிகளில் மதுக்கடைகள், பார்களை மூட ஆட்சியர் உத்தரவு!
திங்கள் 12, ஜனவரி 2026 4:35:54 PM (IST)

நாகர்கோவில்- நியூ ஜல்பைகுரி அமித் பாரத் ரயில் அறிவிப்பு வழித்தடத்தில் சிறிய மாற்றம் தேவை!
ஞாயிறு 11, ஜனவரி 2026 12:48:03 PM (IST)

உங்க கனவ சொல்லுங்க திட்டத்தில்1057 தன்னார்வலர்கள் தேர்வு: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 9, ஜனவரி 2026 4:52:17 PM (IST)

அனைவரும் சாலைவிதிகளை மதிக்க வேண்டும்: எஸ்பி ஸ்டாலின் வேண்டுகோள்
வெள்ளி 9, ஜனவரி 2026 3:25:46 PM (IST)

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
வியாழன் 8, ஜனவரி 2026 3:37:10 PM (IST)

குமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 வழங்கும் திட்டம் துவக்கம்
வியாழன் 8, ஜனவரி 2026 12:54:42 PM (IST)

