» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நண்பர்களுடன் ஆற்றில் குளித்த பிளஸ்-1 மாணவன் மரணம் : தக்கலை அருகே சோகம்!

புதன் 24, செப்டம்பர் 2025 5:31:46 PM (IST)

தக்கலை அருகே நண்பர்களுடன் ஆற்றில் குளித்த பிளஸ்-1 மாணவன் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குமரி மாவட்டம் களியக்காவிளையை சேர்ந்தவர் ஷேக்முகம்மது, ஓட்டல் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக தக்கலை அருகே உள்ள சரல்விளையில் வாடகை வீட்டில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவருக்கு தஸ்லீமா என்ற மனைவியும் 2 மகன்களும், ஒரு மகளும் உண்டு. இவர்களில் இளைய மகன் அகமது (16). பிளஸ்-1 படித்து வருகிறார்.

நேற்று நேற்று நண்பர்களுடன் வள்ளியற்றில் குளிக்க சென்றபோது ஆற்றில் மயக்கமடைந்துள்ளார். நண்பர்கள் அவரை கரைக்கு கொண்டு வந்து தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் ஆற்றில் குளித்த பிளஸ்-1 மாணவன் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory