» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வீட்டில் பூந்தொட்டியில் கஞ்சா வளர்த்த இளைஞர் கைது!

செவ்வாய் 23, செப்டம்பர் 2025 8:21:06 PM (IST)



சுங்கான்கடை அருகே வீட்டில் பூந்தொட்டியில் கஞ்சா செடி வளர்த்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம்  சுங்கான்கடை அருகே பனவிளை பகுதியை சேர்ந்தவர் அஜின் (27). இவர் தற்போது பருத்தியறைதோட்டம் பகுதியில் வசித்து வருகிறார். கொத்தனாரான இவர் சென்னையில் வேலைக்கு சென்ற போது கஞ்சா வாங்கி பயன்படுத்தியுள்ளார். 

இவர் வாங்கிய கஞ்சாவில் இருந்த விதையை வீட்டிற்கு கொண்டு வந்து பூந்தொட்டியில் விதைத்து அதை வளர்த்து வந்துள்ளார். இது தொடர்பாக தக்கலை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் செடி தொட்டியில் வளர்த்து வந்த கஞ்சா செடியை பறிமுதல் செய்ததோடு அஜினை கைது செய்து சிறையிலடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory