» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி: 2 பெண்கள் உட்பட 3பேர் அதிரடி கைது!

செவ்வாய் 23, செப்டம்பர் 2025 5:50:41 PM (IST)

நீதித்துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 3பேரை போலீசார் கைது செய்தனர். 

கன்னியாகுமரி மாவட்டம் அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்த ஐயப்பன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இவர் தனது இரு மகள்களுக்கும் நீதித் துறையில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியதாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.ஸ்டாலினிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். 

அதன் பேரில், மாவட்ட குற்றபிரிவு, உதவி ஆய்வாளர் சார்லெட் தலைமையிலான போலீசார் அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரது மனைவி ரம்யா(31) மற்றும் அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்த ஆறுமுகப் பெருமாள் என்பவரது மகன் சுரேஷ்(32) மற்றும் கீழே சரக்கல்விளை பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரது மகள் அனுசியா(35) ஆகியோரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் இவர்கள் பல நபர்களிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.


மக்கள் கருத்து

vincySep 23, 2025 - 07:42:31 PM | Posted IP 162.1*****

வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியதாக புகார் சொல்லும் இராணுவ ஊழியருக்கு வேலைவாய்ப்பிற்காக தகுதியை விட பணம் கொடுக்கும் எண்ணம் தவறு என்று ஏன் தோணவில்லை?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory