» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில்!

செவ்வாய் 23, செப்டம்பர் 2025 12:14:30 PM (IST)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. 

தெற்கு ரயில்வே சார்பில், தீபாவளி பண்டிகை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் (வ.எண்.06151) சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வருகிற 29-ம்தேதி, அடுத்த மாதம் 6-ம் தேதி, 13-ம் தேதி மற்றும் 20-ம்தேதிகளில் நள்ளிரவு 11.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.50 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது. மதியம் 1.20 மணிக்கு கன்னியாகுமரி ரயில் நிலையம் சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரயில் (வ.எண்.06152) கன்னியாகுமரியில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வருகிற 30-ம்தேதி, அடுத்த மாதம் 7,14 மற்றும் 21-ம் தேதிகளில் மாலை 3.35 மணிக்கு புறப்பட்டு இரவு 8.10 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்டிரல் ரயில் நிலையம் சென்றடைகிறது.

ரயிலில், 2 இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 5 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில்கள் இரு மார்க்கங்களிலும், நாகர்கோவில், வள்ளியூர், நாங்குனேரி, நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் அரக்கோணம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory