» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தலைச்சிறந்த மருத்துவர்களா உருவாக வேண்டும் : மாணவர்களுக்கு ஆட்சியர் வாழ்த்து!
செவ்வாய் 23, செப்டம்பர் 2025 11:32:03 AM (IST)

தலைச்சிறந்த தலைசிறந்த மருத்துவர்களாக உருவாகிட வேண்டும் என்று முதலாமாண்டு மருத்துவ கல்லூரி மாணவ மாணவியர்களிடையே மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவுறுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் முதலாமாண்டு மருத்துவக்கல்வி பயில வருகை தந்துள்ள மாணவ மாணவிகளிடையே கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா கலந்து கொண்டு பேசுகையில்- ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2025- 2026 ஆம் கல்வியாண்டுக்கான முதலாமாண்டு மருத்துவக் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு வகுப்புகள் துவக்கபட்டுள்ளது.
நீங்கள் இந்திய அளவில் நடைபெற்ற போட்டி தேர்வை எதிர்கொண்டு, அதில் வெற்றி பெற்று, அனைவரும் மருத்துவ படிப்புக்கு வந்துள்ளீர்கள், நீங்கள் அனைவரும் மருத்துவதுறையை தேர்வு செய்ததற்காக உங்களை மனதார பாராட்டுகிறேன். இந்த மருத்துவக்கல்லூரியை தேர்ந்தெடுத்ததற்கு நீங்கள் பெருமை கொள்ள வேண்டும். இம்மருத்துவக் கல்லூரி 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
மேலும் பச்சைப் பசேல் என்று அழகுடன் காட்சி அளிக்கும். நீங்கள் இந்த மருத்துவக் கல்லூரியின் 22-வது Batch-ஆக நீங்கள் சேர்த்துள்ளீர்கள். இம்மருத்துவக் கல்லூரியில் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு ஈடாக மிகவும் திறமை வாய்ந்த பேராசிரியர்கள் உள்ளார்கள். அனைத்து நோய்களுக்கான சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. குறிப்பாக புற்றுநோய்க்கான சிகிச்சை, உறுப்புமாற்று அறுவை சிகிச்சையும் இங்கு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாணவர்கள் எந்தவித கெட்டப்பழக்கத்துக்கும் அடிமையாகாமல் உங்கள் படிப்பில் கவனத்தைச் செலுத்தி நன்றாக படித்து தலைசிறந்த மருத்துவர்களாக உருவாகிட வேண்டும். விளையாட்டு மற்றும் பிற திறமைகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் மிகவும் சோர்வாக இருக்கும் சமயத்தில் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்களுடன் கலந்துரையாடினால் நம்மைவிடவும் துன்பப்படுவோர் இருக்கிறார்கள் என்பதை அறியலாம்.
இம்மாவட்ட ஆட்சியரின் கண், இம்மாவட்டத்தின் அமைச்சரின் கண், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கண் என அனைவருடைய பார்வையும் இம்மருத்துவக் கல்லூரியின் மீதே இருக்கும். எனவே Ragging என்ற பிரச்சினை இந்தக் கல்லூாயில் இருக்காது. அப்படி ஏதேனும் இருந்தால் இம்மருத்துவக் கல்லூாயில் உள்ள முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரிடம் நீங்கள் தெரிவிக்கலாம்.
நீங்கள் இந்த 5 வருடமும் மிகவும் நன்றாகப் படித்து, பட்ட மேற்படிப்பும் உங்களுக்குப் பிடித்த பாடத்தில் சேரலாம். இங்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 35 மாணவிகளும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 15 மாணவர்களும், மெட்ரிக் போஸ்ட் ஸ்காலர்ஷிப் (Post Matric Scholarship) திட்டத்தின் கீழ் 40 மாணவ மாணவிகளும், பி.எம். யசஸ்வி மெட்ரிக் போஸ்ட் ஸ்காலர்ஷிப் (PM Yasasvi Post Matric Scholarship) திட்டத்தின் கீழ் 209 மாணவ மாணவிகளும் பயனடைந்து வருகிறார்கள். எனவே நீங்களும் மிகச் சிறப்பாக படித்து சேவை மனப்பான்மையுடன் இந்த சமூகத்தில் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் லியோடேவிட், மருத்துவக கண்காணிப்பான பேராசிரியர் கிங்ஸ்லி, உறைவிட மருத்துவர் மரு விஜயலெட்சுமி, உதவி உறைவிட மருத்துவர் ரெனிமோள், விடுதிக் காப்பாளர் பேராசிரியர் செல்வின், பேராசிரியர்கள், மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரத்த தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா வேண்டுகோள்
வெள்ளி 10, அக்டோபர் 2025 3:59:36 PM (IST)

திருவட்டாறு கோவில் நகை திருட்டு வழக்கில் மேல் முறையீடு செய்தவர்கள் விடுதலை!
வெள்ளி 10, அக்டோபர் 2025 12:52:50 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் 9277 மனுக்களுக்கு தீர்வு: ஆட்சியர் தகவல்
வியாழன் 9, அக்டோபர் 2025 5:18:19 PM (IST)

குமரியில் 102 ஆண்டுகளுக்குப் பின் பூத்து குலுங்கும் பனை மரம் : பொதுமக்கள் வியப்பு
வியாழன் 9, அக்டோபர் 2025 10:05:24 AM (IST)

ஒரே நாளில் 8 சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது : குமரி மாவட்ட போலீஸ் அதிரடி!
புதன் 8, அக்டோபர் 2025 11:22:05 AM (IST)

திருடச் சென்ற வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் - வாலிபர் கைது!
செவ்வாய் 7, அக்டோபர் 2025 12:48:02 PM (IST)
