» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
விதிகளை மீறி நம்பர் பிளேட் பொருத்தினால் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை!
திங்கள் 22, செப்டம்பர் 2025 10:58:44 AM (IST)

வாகனங்களில் விதிகளை மீறி நம்பர் பிளேட்டுகளை பொருத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குமரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
குமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியில் உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சரியான வாகன எண் தகடுகள் இல்லாத வாகனங்கள் மீது சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் சரியான எண் தகடுகள் இல்லாத 51 வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
சரியான வாகன எண் தகடுகள் இல்லாத வாகனங்கள் குற்றங்கள் மற்றும் விபத்துகளில் ஈடுப்பட அதிக வாய்ப்புள்ளதால், பழுதடைந்த எண் தகடுகள் கொண்ட வாகனங்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்குமாறு நாகர்கோவில் உட்கோட்ட காவல் நிலையங்களுக்கு உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார் அறிவுறுத்தியுள்ளார்.
திருட்டு வாகனங்கள் அல்லது வேறு ஏதேனும் குற்றங்களில் ஈடுபடும் வாகனங்களை அடையாளம் காண ஸ்மார்ட் காவலர் செயலி மற்றும் வாகன் செயலியிலும் வாகனங்கள் சரிபார்க்கப்பட்டன. மேலும் நாகர்கோவில் உட்கோட்ட பிரிவில் 4 சிறார் ஓட்டுநர் மற்றும் அவர்களின் பெற்றோர் மீதும் வழக்குக் பதிவு செய்யப்பட்டன. இந்த கடுமையான நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தங்கள் திருப்தியையும் பாராட்டையும் தெரிவித்தனர்.
ஆய்வாளர் மீனா, காவல் உதவி ஆய்வாளர்கள் சத்திய சோபன், ஸ்டான்லி ஜாண், தலைமை காவலர்கள் உமர் க்ஷெரிப், அகிலன், முதல் நிலை காவலர் அசாருதீன் ஆகியோர் சோதனையில் ஈடுப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில்- நியூ ஜல்பைகுரி அமித் பாரத் ரயில் அறிவிப்பு வழித்தடத்தில் சிறிய மாற்றம் தேவை!
ஞாயிறு 11, ஜனவரி 2026 12:48:03 PM (IST)

உங்க கனவ சொல்லுங்க திட்டத்தில்1057 தன்னார்வலர்கள் தேர்வு: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 9, ஜனவரி 2026 4:52:17 PM (IST)

அனைவரும் சாலைவிதிகளை மதிக்க வேண்டும்: எஸ்பி ஸ்டாலின் வேண்டுகோள்
வெள்ளி 9, ஜனவரி 2026 3:25:46 PM (IST)

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
வியாழன் 8, ஜனவரி 2026 3:37:10 PM (IST)

குமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 வழங்கும் திட்டம் துவக்கம்
வியாழன் 8, ஜனவரி 2026 12:54:42 PM (IST)

நாகர்கோவில் சந்திப்பில் ரயில் சேவை மாற்றம் : குமரியில் இருந்து ரயில்கள் இயக்கம்!
புதன் 7, ஜனவரி 2026 4:37:07 PM (IST)

