» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பத்மநாபபுரம் அரண்மனையில் உடைவாள் கைமாற்றும் நிகழ்ச்சி: கேரள அமைச்சா் பங்கேற்பு
சனி 20, செப்டம்பர் 2025 4:23:49 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு உடைவாள் கைமாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவிதாங்கூா் மன்னா் ஆட்சியில் பத்மநாபபுரம் அரண்மனையில் நவராத்திரி விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 1840ஆம் ஆண்டில் சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் இந்த விழா திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. இதில் பங்கேற்கும் வகையில் சுசீந்திரம் முன்னுதித்தநங்கை அம்மன், பத்மநாபபுரம் தேவாரகட்டு சரஸ்வதி அம்மன், குமாரகோவில் வேளிமலை முருகன் ஆகிய விக்கிரகங்கள் ஊா்வலமாக திருவனந்தபுரம் கொண்டுசெல்லப்படும்.
இந்நிலையில், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் நடைபெற உள்ள நவராத்திரி விழாவில் பங்கேற்க இங்கிருந்து சரஸ்வதி அம்மன் உள்ளிட்ட சுவாமி விக்கிரகங்கள் ஆகியவற்றுடன் மன்னர் பயன்படுத்திய உடைவாளை தமிழ்நாடு அரசு கேரளா அரசுக்கு கை மாறுவது வழக்கம். கேரள மாநில அருங்காட்சியக துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன் பெற்றுக் கொள்ள தமிழ்நாடு அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உடைவாளை கை மாறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில்- நியூ ஜல்பைகுரி அமித் பாரத் ரயில் அறிவிப்பு வழித்தடத்தில் சிறிய மாற்றம் தேவை!
ஞாயிறு 11, ஜனவரி 2026 12:48:03 PM (IST)

உங்க கனவ சொல்லுங்க திட்டத்தில்1057 தன்னார்வலர்கள் தேர்வு: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 9, ஜனவரி 2026 4:52:17 PM (IST)

அனைவரும் சாலைவிதிகளை மதிக்க வேண்டும்: எஸ்பி ஸ்டாலின் வேண்டுகோள்
வெள்ளி 9, ஜனவரி 2026 3:25:46 PM (IST)

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
வியாழன் 8, ஜனவரி 2026 3:37:10 PM (IST)

குமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 வழங்கும் திட்டம் துவக்கம்
வியாழன் 8, ஜனவரி 2026 12:54:42 PM (IST)

நாகர்கோவில் சந்திப்பில் ரயில் சேவை மாற்றம் : குமரியில் இருந்து ரயில்கள் இயக்கம்!
புதன் 7, ஜனவரி 2026 4:37:07 PM (IST)

