» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அக்மார்க் தரச்சான்று பெறுவதற்காக பதிவு கட்டணம் ரூ.5000லிருந்து ரூ.500-ஆக குறைப்பு

புதன் 17, செப்டம்பர் 2025 4:55:58 PM (IST)

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அக்மார்க் தரச்சான்று பெறுவதற்காக பதிவு கட்டணம் ரூ.5000 – லிருந்து ரூ.500-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்களை அரிசி, மசாலா பொருட்கள், நெய், தேன், எண்ணெய் மற்றும் மாவு வகைகள் போன்ற அத்தியாவசிய 248 வகை பொருட்களுக்கு கலப்படத்தை தவிர்க்கும் வகையில் கட்டுமானர்கள் அக்மார்க் தரச் சான்று பெற்று விநியோகம் செய்து வருகின்றனர். தற்போது உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களும் அரிசி, தேன், மசாலா பொருட்கள், எண்ணெய் போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். 

அவ்வாறு விற்பனை செய்யும் போது கலப்படமற்ற தரமான பொருட்கள் என்பதை உறுதி செய்வதற்கும் அக்மார்க் தரச் சான்றிதழ் பெற்று அக்மார்க் முத்திரையும் உறையின் மேல் ஒட்டுவது அவசியமாகும். தற்போது உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அக்மார்க் தரச்சான்று பெறுவதற்காக பதிவு கட்டணம் ரூ.5000 – லிருந்து ரூ.500-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த வாய்ப்பை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பயன்படுத்தி அக்மார்க் தரச்சான்று பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்கள். மேலும் தகவல் பெற கிருஷ்ணன்கோவில் மற்றும் மார்த்தாண்டத்தில் அமைந்திருக்கும் மாநில அக்மார்க் தரம் பிரிப்பு ஆய்வகங்களை அணுகலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory