» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)
குமரியில் விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்லும் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள். பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி படகுகளை இயக்கி வருகிறது.
இந்த நிலையில், கன்னியாகுமரி கடல் பகுதியில் தற்போது பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், பாதுகாப்பு கருதி, விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்லும் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சபரிமலை சீசன் என்பதால், கன்னியாகுமரிக்கு ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். தற்போது விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்லும் படகு சேவை நிறுத்தப்பட்டதால், அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிஆர்பி தேர்வில் வெற்றிபெற்ற 35 ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணைகள்: அமைச்சர் வழங்கல்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:27:08 PM (IST)

சிவாலய ஓட்டம்: கனிமவள லாரிகளுக்கு 2 நாட்கள் தடை - எஸ்பி ஸ்டாலின் உத்தரவு!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:38:17 PM (IST)

கேரளாவில் முழு அடைப்பு: தமிழகப் பேருந்துகள் எல்லையில் நிறுத்தம் - பொதுமக்கள் அவதி!
வியாழன் 12, பிப்ரவரி 2026 3:12:37 PM (IST)

அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்ற வேண்டும் : பயணிகள் சங்கம் கோரிக்கை!
வியாழன் 12, பிப்ரவரி 2026 12:14:10 PM (IST)

நாகர்கோவில் - பெங்களூர் ரயில் இயக்கி 12 வருடங்கள் நிறைவு :மேலும் ஒரு ரயில் வருமா...?
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:56:53 PM (IST)

டாஸ்மார்க் கதாநாயகர்களை வீட்டுக்கு அனுப்புவோம்: குமரி மாவட்ட பாஜக பரபரப்பு போஸ்டர்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:25:18 PM (IST)

