» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பைக் விபத்தில் வாலிபர் பலி: வெளிநாட்டில் இருந்து சகோதரர் திருமணத்திற்கு வந்தபோது சோகம்!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:23:50 AM (IST)
தக்கலை அருகே சகோதரர் திருமணத்திற்காக வெளிநாட்டில் இருந்து வந்த வாலிபர் மோட்டார் சைக்கிள் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
குமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள அரண்மனை சாலை, இலங் கத்துவிளையை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு சிபு (31), சீனு (30) என இரண்டு மகன்கள் இருந்தனர். இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தனர். இந்தநிலையில் மூத்த மகன் சிபுவுக்கு கடந்த மாதம் திருமணம் நடந்தது. இதையொட்டி - சகோதர்கள் இருவரும் வெளிநாட்டில் இருந்து விடுமுறை - யில் சொந்த ஊருக்கு வந்தனர்
இந்தநிலையில் நேற்று முன் தினம் சீனு தனது நண்பரை பார்பதற்காக குமாரபுரத்திற்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கிறிஸ்தவ ஆலயத்தின் அருகில் சென்ற போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் சீனு தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கொற்றிகோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக் காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாகபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
வெளிநாட்டில் இருந்து சகோதரர் திருமணத்திற்காக சொந்த ஊருக்கு வந்த வாலிபர் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள் ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கனிமவளங்களை ஏற்றி வந்த 5 கனரக லாரிகளை பொதுமக்கள் சிறைபிடிப்பு: போலீசில் ஒப்படைப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 5:16:57 PM (IST)

நர்சிங் மாணவி தற்கொலை விவகாரம்: கல்லூரி முதல்வர் கைது - கல்லூரி விடுமுறை நீட்டிப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 11:53:27 AM (IST)

நாகர்கோவிலில் மாணவர்களை அனுமதித்த பார் மூடல் : எஸ்.பி. ஸ்டாலின் அதிரடி ஆய்வு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 11:43:22 AM (IST)

நாகர்கோவில் - பெங்களூரு சுற்றுவழி வந்தே பாரத் ரயிலுக்கு குமரி பயணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு
புதன் 19, ஆகஸ்ட் 2026 5:13:17 PM (IST)

புனித சவேரியார் தேவலாயத்தில் ரூ.2.28 கோடியில் சீரமைப்பு பணி: ஆட்சியர் பிரதாப் ஆய்வு
புதன் 19, ஆகஸ்ட் 2026 12:22:31 PM (IST)

கடல் சீற்றம் எச்சரிக்கை: கடலோர மீனவ மக்கள் பாதுகாப்புடன் இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல்!
புதன் 19, ஆகஸ்ட் 2026 11:44:38 AM (IST)


