» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தேசிய ஆயுர்வேத தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
புதன் 17, செப்டம்பர் 2025 4:21:01 PM (IST)

தேசிய ஆயுர்வேத தினம் மற்றும் உலக நோயாளிகளின் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 10 -வது தேசிய ஆயுர்வேத தினம் மற்றும் உலக நோயாளிகளின் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பு பிரிவு மற்றும் நிர்வாக குழு சார்பில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (17.09.2025) கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவிக்கையில்- 10 -வது தேசிய ஆயுர்வேத தினம் மற்றும் உலக நோயாளிகளின் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனை மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி, இன்று துவக்கிப்பட்டுள்ளது.
இப்பேரணியில் நோயாளிகளின் பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள், சுய மருத்துவத்தினால் வரும் பாதிப்புகள், ஆயுர்வேத மருந்துகள் இயற்கையானவை எனவே மருத்துவரின் ஆலோசனை தேவையில்லை என்று பொதுமக்களிடையே நிலவி வரும் தவறான நம்பிக்கை தவறாக வழிகாட்டும் மருத்துவம் சார்ந்த போலியான விளம்பரங்களுக்கு விழிப்பாக இருங்கள். மருந்துகளை மருத்துவர் ஆலோசனை படி உட்கொண்டு எதிர்மறை விளைவுகளை தவிர்ப்போம் முதலிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகள் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இப்பேரணியானது கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங்கி வேப்பமூடு சந்திப்பு வழியாக கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியை வந்து அடையும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.
பேரணியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கு.சுகிதா (பொது), கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனை கல்லூரி முதல்வர் ஜெ.கிளாரன்ஸ் டேவி, கல்லூரி இணை பேராசிரியர் ஜெயகிருஷ்ணன், மருத்துவ கண்காணிப்பு அலுவலர் டோமின், மருத்துவர்கள் கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு: குமரி மாவட்டத்தில் 1500 போலீசார் பாதுகாப்பு - எஸ்பி தகவல்!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:30:52 PM (IST)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 12:53:41 PM (IST)

ஒரே நாளில் 13 கனரக டாரஸ் வாகனங்களின் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:32:23 AM (IST)

குமரி மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிகள்: சிறப்பு கண்காணிப்பு அலுவலர் விஜய் நெக்ரா ஆய்வு
திங்கள் 22, டிசம்பர் 2025 5:27:18 PM (IST)

நாகர்கோவிலில் புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
திங்கள் 22, டிசம்பர் 2025 4:56:33 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : 335 கோரிக்கை மனுக்கள்!
திங்கள் 22, டிசம்பர் 2025 4:47:24 PM (IST)


.gif)