» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பச்சிளம் குழந்தையின் வாயில் டிஸ்யூ பேப்பரை திணித்து கொலை செய்த கொடூர தாய் கைது!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 4:52:08 PM (IST)
கருங்கல் அருகே பிறந்து 42 நாட்கள் ஆன பெண் குழந்தைக்கு வாயில் 'டிஸ்யூ' பேப்பரை திணித்து கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்த பெனிட்டா ஜெயஅன்னாள் (20), மதுரையைச் சேர்ந்த கார்த்திக் (21) இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். பெனிட்டாவுக்கு 43 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. நேற்று வியாழக்கிழமை அதிகாலை சுமார் 3 மணி அளவில் குழந்தை இறந்தது.இது தொடர்பாக கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனையில், குழந்தையை வாயில் டிஸ்யூ பேப்பரை திணித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பெனிட்டா ஜெய அன்னாள் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். குளச்சல் ஏ.எஸ்.பி., ரேகா ஆர். நங்லெட் நேரில் விசாரணை நடத்தினர். தன்னைவிட குழந்தையிடம் கணவர் அதிக பாசம் காட்டியதால் கொன்றதாக பெனிடடா ஜெயஅன்னாள் கூறிய நிலையில், கருங்கல் போலீசார் அவரை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்குரிமையை பாதுகாக்க வேண்டியது நம் கடமை: விஜய் வசந்த் எம்.பி அறிக்கை
செவ்வாய் 4, நவம்பர் 2025 9:25:05 PM (IST)

வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
திங்கள் 3, நவம்பர் 2025 8:19:38 PM (IST)

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: 3 முறை நேரில் சென்று விசாரிக்க அறிவுறுத்தல்
சனி 1, நவம்பர் 2025 5:36:12 PM (IST)

குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த நாள் : மார்ஷல் நேசமணி சிலைக்கு மரியாதை!
சனி 1, நவம்பர் 2025 12:48:19 PM (IST)

ஐயப்ப பக்தர்கள் சீசன் நவ. 17ல் தொடக்கம்: குமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சனி 1, நவம்பர் 2025 12:09:30 PM (IST)

பைக் திருட்டில் ஈடுபட்ட 3 இளஞ்சிறார்கள் உட்பட 4 பேர் கைது: 6 வாகனங்கள் மீட்பு
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:34:24 PM (IST)


.gif)