» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரியில் கண்ணாடி பாலம் மிகவும் பாதுகாப்பாக உள்ளது: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
புதன் 10, செப்டம்பர் 2025 4:15:51 PM (IST)

கன்னியாகுமரியில் விவேகானந்தர் சிலைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் செல்லும் கண்ணாடி பாலம் மிகவும் பாதுகாப்பாக உள்ளது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "கன்னியாகுமரியில் விவேகானந்தர் சிலைக்கும் அய்யன் திருவள்ளுவர் சிலைக்கும் செல்லும் கண்ணாடி பாலம் கட்டப்பட்ட பிறகு சுமார் 17 லட்சம் பொது மக்கள் பார்வையிட்டுள்ளனர். அவ்வப்போது முறையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.16.8.2025 அன்று பராமரிப்புப் பணிகள் மேற்கொண்ட போது, 8 மீட்டர் உயரத்தில் ஆர்ச்சில் உள்ள போல்டுகளை சரி செய்யும் பொழுது சுத்தியல் கை தவறி விழுந்து விட்டது.
அதன் விளைவாக கண்ணாடியின் மேல் பகுதியில் மட்டும் மெல்லிய விரிசல் ஏற்பட்டது. உடனடியாக சேதமடைந்த இடத்தில் மட்டும் பாதசாரிகள் பாதுகாப்பு கருதி தடுப்பாண்கள் அமைக்கப்பட்டது. விரிசல் ஏற்பட்ட கண்ணாடியை 2.00 மீட்டர் நீளமும், 2.40 மீட்டர் அகலமும், அதே வடிவமைபில் அதே தரத்துடன் கம்பி இழையிலான கண்ணாடி 08.09.25 அன்று பொறுத்தப்பட்டது. மேலும், போதுமான எடையினைக் கொண்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தாங்குத்திறன் உறுதி செய்யப்பட்டதில் கண்ணாடி பாதுகாப்பாக உள்ளது.
77 மீட்டர் நீளமுடைய கண்ணாடி பாலத்தில், ஒரே நேரத்தில், 650 நபர்கள் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்ததாரரின் பராமரிப்பு காலம் 10 ஆண்டு காலம் என்பதால், சேதமடைந்த கண்ணாடியினை ஒப்பந்ததாரரின் செலவிலேயே சரி செய்யப்பட்டுவிட்டது. தற்போது, அனைத்து பார்வையாளர்களும், கண்ணாடி பாலத்தைப் பார்வையிட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.
பேட்டியின் போது நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசுச் செயலாளர் இரா.செல்வராஜ், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் செல்லத்துரை, நெடுஞ்சாலைத்துறை சிறப்பு தொழில்நுட்ப அலுவலர் இரா.சந்திரசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: 3 முறை நேரில் சென்று விசாரிக்க அறிவுறுத்தல்
சனி 1, நவம்பர் 2025 5:36:12 PM (IST)

குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த நாள் : மார்ஷல் நேசமணி சிலைக்கு மரியாதை!
சனி 1, நவம்பர் 2025 12:48:19 PM (IST)

ஐயப்ப பக்தர்கள் சீசன் நவ. 17ல் தொடக்கம்: குமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சனி 1, நவம்பர் 2025 12:09:30 PM (IST)

பைக் திருட்டில் ஈடுபட்ட 3 இளஞ்சிறார்கள் உட்பட 4 பேர் கைது: 6 வாகனங்கள் மீட்பு
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:34:24 PM (IST)

பேச்சுப்பாறையில் அணையில் உபரிநீர் திறப்பு : திற்பரப்பு அருவில் வெள்ளப்பெருக்கு!
வெள்ளி 31, அக்டோபர் 2025 4:47:38 PM (IST)

மாணவியை பலாத்காரம் செய்த டேக்வாண்டோ பயிற்சியாளர் தற்கொலை முயற்சி!
வெள்ளி 31, அக்டோபர் 2025 12:36:14 PM (IST)


.gif)