» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கடை வியாபாரிகள் பிளாட்பாரத்தை ஆக்கிரமிக்க கூடாது : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
புதன் 16, ஜூலை 2025 4:24:43 PM (IST)

தூத்துக்குடியில் வியாபாரிகள் பிளாட்பாரத்தை ஆக்கிரமிக்க கூடாது. இல்லை என்றால் மாநகராட்சி அதிகரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடந்தது. முகாமி அவர் பேசியதாவது "கிழக்கு மண்டலம் முழுவதும் அதிகாரிகள் ஒத்துழைப்போடு உடனுக்குடன் குறைகளை தீர்த்து வருவதால் முகாமில் மனு கொடுப்பது குறைந்து வருகிறது. தூத்துக்குடி தெப்பக்குளத்தை சீரமைக்கும் பணி விரைவில் நடைபெற உள்ளது.
பிரதான சாலைகளில் இருபுறமும் பேவர் பிளாக் பதிக்கப்பட்டு வருகிறது. கடை வியாபாரிகள் பிளாட்பாரத்தை ஆக்கிரமிக்க கூடாது. இல்லை என்றால் மாநகராட்சி அதிகரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். 5வது வார்டு பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட பைப் லைன் உள்ளதால் சீராக குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது புதிய பைப்லைன் பணிகள் நடந்து வருகிறது. பனிமய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு இன்னும் ஒரு சில தினங்களில் ஆலய பகுதி முழுவதும் 150 சுகாதார பணியாளர்களுடன் மாஸ் கிளீனிங் நடைபெறும் என்றார்.
முகாமில், 40வது வார்டு கவுன்சிலர் ரிக்டா ஆர்தர் மச்சாது, மேயரிடம் அளித்த மனுவில் "பனிமய பேராலய திருவிழா 443-ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு சப்பரபவனி நடைபெறும் மாதா கோயில் தெரு, தெற்கு எம்பரர் தெரு, விக்டோரியா ரோடு தெற்கு பீச் ரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மனு அளித்தார்.
முகாமில் துணை ஆணையர் சரவணகுமார், செயற்பொறியாளர் ராமச்சந்திரன், சுகாதார அலுவலர் நெடுமாறன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், ரெஸ்லின், தனலட்சுமி, பேபி ஏஞ்சலின், ராம் அம்மாள், மகேஸ்வரி, மேயரின் உதவியாளர்கள் ரமேஷ், ஜேஸ்பர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பேச்சிப்பாறை அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் : ஆட்சியர் திறந்து வைத்தார்!
வெள்ளி 18, ஜூலை 2025 5:27:44 PM (IST)

நாகர்கோவிலில் ஆசிரியர்கள் சாலை மறியல்: பெண்கள் உட்பட100க்கும் மேற்பட்டோர் கைது
வெள்ளி 18, ஜூலை 2025 4:04:20 PM (IST)

பிரதமர் வருகை: சோழமண்டலத்தில் இருந்து ரயில் வருமா? எதிர்பார்ப்பில் குமரி பயணிகள்!
வியாழன் 17, ஜூலை 2025 5:16:18 PM (IST)

பொருட்காட்சியில் நைட்டி அணிந்து குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்: 7பேர் மீது வழக்குப் பதிவு
வியாழன் 17, ஜூலை 2025 5:02:12 PM (IST)

ஜூலை 25ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா தகவல்!
வியாழன் 17, ஜூலை 2025 3:36:16 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவிப்பு
புதன் 16, ஜூலை 2025 11:24:24 AM (IST)

naan thaanJul 18, 2025 - 10:45:42 AM | Posted IP 162.1*****