» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் 19ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் : முன்பதிவு செய்ய அழைப்பு

புதன் 2, ஜூலை 2025 11:58:41 AM (IST)

தூத்துக்குடியில் வருகிற 19ஆம் தேதி மாபெரும்  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 19.07.2025 அன்று தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரியில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெறவுள்ளது. 

இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்கவுள்ளனர். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் டிரைவர் உள்ளிட்ட 8-ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, அக்ரி, செவிலியர், ஆசிரியர் தகுதி, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகள் போன்ற கல்வித் தகுதிகளையுடைய 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோரை தேர்வு செய்ய உள்ளனர். 

விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் (CANDIDATES) https://forms.gle/1M1DALgQTZUobfrK6 கூகுள் படிவத்தை 18.07.2025 ஆம் தேதிக்கு முன்னதாக சமர்ப்பித்து தங்கள் வருகையை உறுதி படுத்திக்கொள்ளவும் என்று தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

SuganthiJul 2, 2025 - 03:29:23 PM | Posted IP 172.7*****

Thanks for the opportunity

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory