» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை
திங்கள் 30, ஜூன் 2025 3:01:40 PM (IST)
தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக பயணிகள் நலச்சங்கம் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மா. பிரமநாயகம் வெளியிட்ட அறிக்கையில்,"வண்டி எண். 16791-16792 தூத்துக்குடி- பாலக்காடு -தூத்துக்குடி பாலருவி விரைவு ரயிலில் மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டி (3rd A/C Coach) இணைத்ததற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளர், மதுரை கோட்ட மேலாளர் ஆகியோருக்கு பயணிகள் நலச்சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், தூத்துக்குடியில் இருந்து வரும் மற்றும் புறப்படும் ரயில்களுக்கு தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் ஒரு நிறுத்தம் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
RajanJul 2, 2025 - 04:30:55 PM | Posted IP 162.1*****
We needed tuty to Thiruvananthapuram & tuty to hyderabad daily service for our city growth..
DurgadeviJul 2, 2025 - 04:13:01 PM | Posted IP 104.2*****
தூத்துக்குடி MP எந்த ரயில்வே திட்டங்களையும் பெற்று தருவதில்லை மாறாக ஆம்னிபஸ் முதலாளிகளுக்கு வசதியாக புதிய ரயில் வழித்தடங்கள் கேட்டு பெறவில்லை ஏற்கனவே ஓடிகொண்டிருந்த பகல்நேர சென்னை இனைப்பு ரயிலையும் கோவை இனைப்பு ரயிலையும் நிறுத்தியதும் சாதனை
கோபால்Jul 2, 2025 - 12:27:31 PM | Posted IP 162.1*****
முத்து நகர் மற்றும் மைசூர் ரயில்களை மேலூர் ரயில் நிலையத்தில் இங்கிருந்து செல்லும் போது பயணிகளை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்
செய்யதுஉமர்Jul 2, 2025 - 12:21:14 PM | Posted IP 162.1*****
முன்னாள் அமைச்சர் லல்லு பிரசாத் அறிவித்த சென்னை கண்ணியாகுமரிக்கு இரட்டை வழிப்பாதை ரயில் பாதை எப்போது முடிவு பெறும் மேலும் சென்னை கிழக்கு கடற்கரை சாலை மகாபலிபுரம் பாண்டிச்சேரி காரைக்கால் பட்டுக்கோட்டை கீழக்கரை ராமநாதபுரம் சாயல்குடி தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் திருசெந்தூர் உடன்குடி திசையன்விளை வழியாக கண்ணியாகுமரிக்கு ரயில் பாதை எப்போது அமைக்கப்படும் மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் வழியாக திருசெந்தூருக்கு ரயில் பாதை எப்போது அமைக்கப்படும் சென்னையில் இருந்து திருசெந்தூருக்கு ஒரே ஒரு ரயில் சேவை மட்டுமே நடைபெற்று வருகிறது பகலில் நேரடி தூத்துகுடி அருப்புகோட்டை மதுரை திருச்சி விழுப்புரம் வழியாக ரயில் சேவை எப்போது விடப்படும்
P. கண்ணன்Jul 2, 2025 - 08:34:47 AM | Posted IP 162.1*****
நமது மாவட்ட உருப்பினர் நமது மாவட்ட தலைநகரமான தூத்துக்குடி மேல் அக்கரை செலுத்தி இருந்தால் இன்று தூத்துக்குடி முதல் அருப்புக்கோட்டை வழியாக மதுரை வரை ரயில் பாதை என்றோ முடிந்திருக்கும் அதேபோல் இன்னும் ஏறாலமான ரயில்கள் கிடைத்திருக்கும் சொல்லபபோனால் திருச்சி முதல் காரைக்குடி வழியாக தூத்துக்குடி திருவனந்தபுரம் டூ திருநெல்வேலி வழியக தூத்துக்குடி திருப்பதி டூ தூத்துக்குடி கோவை டூ பழனி வழியாக தூத்துக்குடி ஏன் தூத்துக்குடி மக்களை வாட்டி வதைக்கும் போக்குவரத்து நெரிசலில் தினம்தினம் அல்லல் படும் மாணவ மாணவிகள் சிக்கிதவிக்கும் 1&2 கேட் பாளத்தையே நிறைவேற்றிதராத இவரை இனி எந்த வகையில் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்
HenryJul 1, 2025 - 10:18:17 PM | Posted IP 172.7*****
தூத்துக்குடி மதுரை மெமோ ரயில்கள் விட வேண்டும். சென்னைக்கு தஞ்சாவூர் திருவாரூர் வழியாக தூத்துக்குடியிலிருந்து ஒரு இரவு நேர ரயில் விட வேண்டும்.
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)

RAMAR P BRAYANT NAGAR 11TH ST TUTICORINJul 2, 2025 - 05:18:43 PM | Posted IP 162.1*****