» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா 30ம் தேதி தொடக்கம் : ஆட்சியர் ஆலோசனை!
திங்கள் 23, ஜூன் 2025 4:46:24 PM (IST)

நெல்லையப்பர் திருக்கோயில் ஆனிப்பெருந்திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி டவுண் அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில் ஆனிப்பெருந்திருவிழா 30.06.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, 08.07.2025 அன்று தேரோட்டம் நடைபெறவுள்ளது. இத்திருவிழாவினை முன்னிட்டு இலட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, காவல்துறையின் மூலம் திருநெல்வேலி நகர் நான்கு ரதவீதிகளிலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்து காவல்துறையின் சார்பில் திருநெல்வேலி சந்திப்பிலிருந்து வரும் வாகனங்களை திருநெல்வேலி நகர் பாரதியார் தெரு, தெற்குமவுண்ட்ரோடு, மேலமவுண்ட்ரோடு, குற்றாலம் ரோடு, தொண்டர் நயினார் சன்னதி வழியாக திருப்பிவிட்டு சுவாமி அம்பாள் வீதி உலாவிற்கு இடையூறு இல்லாத தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். மின்சார வாரியத்தின் சார்பில் எவ்வித மின் தடங்கலும் நிகழா வண்ணமும், மின் இணைப்பு வயர்கள் மற்றும் மின்சார பெட்டிகள் தேர் உலா வர தடங்கல் இல்லாதபடி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மாநகராட்சி சார்பில் நான்கு ரதவீதிகளிலும் தேர்கள் ஓடும் வகையில் தரமான சாலைகள் அமைப்பது குறித்தும், பக்தர்களுக்கு குடிநீர், சுகாதார வசதி, நோய்கிருமிகள் பரவாமல் இருக்க கிருமி நாசினிகள் தெளிப்பது, கழிவு குப்பை மற்றும் பூக்களை சுகாதார பணியாளரை கொண்டு தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். நெடுஞ்சாலை துறை சார்பில் நெல்லை டவுண் ஆர்ச்சிலிருந்து சுவாமி நெல்லையப்பர் திருக்கோயில் வரை உள்ள ரோடு, நான்கு ரதவீதியில் உள்ள ரோடுகள் குண்டுங்குழியுமாக உள்ளதை செப்பனியிட வேண்டும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இலட்சக்கணக்கில் பக்தபெருமக்கள் வருவதால் சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தீயணைப்புத்துறை சார்பில் தீயணைப்பு ஊர்தி ஒன்றும் பக்தர்கள் அதிகளவில் வருகைதரவுள்ளதால் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். சுகாதாரத்துறையின் மூலம் தேவையான மருத்துவ உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள், ஆம்புலன்ஸ் வாகனத்துடன், மருத்துவ முகாம் ஏற்படுத்த வேண்டும். துறை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைத்து சிறப்பாக பணியாற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்கள்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, மாநகராட்சி ஆணையாளர் என்.ஓ.சுகபுத்ரா, காவல்துறை துணை ஆணையாளர் பிரசன்னகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி , திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் கண்ணா கருப்பையா, வட்டார போக்குவரத்து அலுவலர் என்.ஆர்.சரவணன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)

இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் : ஆட்சியர் தகவல்
திங்கள் 30, ஜூன் 2025 12:19:27 PM (IST)

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்
ஞாயிறு 29, ஜூன் 2025 11:28:11 AM (IST)
