» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நெல்லையில் போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு: இளஞ்சிறார் உட்பட 5 பேர் கைது
திங்கள் 23, ஜூன் 2025 11:15:21 AM (IST)
நெல்லையில் காவலரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் இளஞ்சிறார் உட்பட 5பேரை போலீசார் கைது செய்துள்னர்.
நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதான வளாகத்தில் மாநகராட்சி சிறுவர் பூங்கா உள்ளது. வார விடுமுறை தினமான நேற்று இங்கு ஏராளமானவர்கள் குடும்பத்துடன் சென்றதால் கூட்டம் அலைமோதியது. இரவு 9 மணி அளவில் பூங்காவில் நின்ற சில இளைஞர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது அங்கு குடும்பத்தினருடன் வந்த போலீஸ்காரரான மணிமுத்தாறு 9-வது பட்டாலியனைச் சேர்ந்த முகமது ரஹ்மத்துல்லா (29) இளைஞர்களை தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல், போலீஸ்காரர் முகமது ரஹ்மத்துல்லவை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார், பூங்காவுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே போலீஸ்காரர் முகமது ரஹ்மத்துல்லாவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இளஞ்சிறார் உட்பட 5பேரை போலீசார் கைது செய்துள்ளனர. நெல்லையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)

இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் : ஆட்சியர் தகவல்
திங்கள் 30, ஜூன் 2025 12:19:27 PM (IST)

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்
ஞாயிறு 29, ஜூன் 2025 11:28:11 AM (IST)
