» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வ.உ.சி. துறைமுகம் சரக்கு கையாளுவதில் புதிய சாதனை

திங்கள் 23, ஜூன் 2025 8:27:45 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் சரக்கு கையாளுவதில் புதிய சாதனை படைத்து உள்ளது.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு பல்வேறு நாடுகளில் இருந்து சரக்குகள் இறக்குமதி செய்யப்படுகிறது. அதே போன்று வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் அதிக அளவில் நடந்து வருகின்றன. இந்த துறைமுகம் கடந்த மே மாதம் வரை 20 லட்சத்து 26 ஆயிரத்து 544 டன் நிலக்கரியை கையாண்டு உள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் கையாளப்பட்ட நிலக்கரியை விட 45.30 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு 13 லட்சத்து 94 ஆயிரத்து 763 டன் நிலக்கரி கையாளப்பட்டு இருந்தது.

இதே போன்று கடந்த மே மாதம் வரை 3 லட்சத்து 62 ஆயிரத்து 248 டன் சுண்ணாம்பு கல்லை துறைமுகம் கையாண்டு சாதனை படைத்து உள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் கையாளப்பட்டதை விட 84.55 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு 1 லட்சத்து 96 ஆயிரத்து 286 டன் கையாளப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையான அதிகரிப்பு சிமெண்ட் மற்றும் உரம் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருளான சுண்ணாம்புக்கல்லின் தடையற்ற வினியோகத்தை உறுதி செய்வதில் துறைமுகத்தின் பங்கை எடுத்துக்காட்டுகிறது என்று துறைமுக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


மக்கள் கருத்து

A.Issac JebaJun 23, 2025 - 01:02:12 PM | Posted IP 104.2*****

Super .. Improvement Need to Go Further

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory