» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பழுதான செல்போன் விற்ற கடைக்காரர் ரூ.38,055 வழங்க தூத்துக்குடி நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!

சனி 21, ஜூன் 2025 8:41:26 AM (IST)

பழுதான செல்போனை விற்ற கடைக்காரர், பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ரூ.38,055 வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சார்ந்த கீதா என்பவர் கோவில்பட்டியிலுள்ள மொபைல் கடையில் ரூபாய் 3,055 மதிப்புள்ள செல்போன் ஒன்று வாங்கியுள்ளார். வாங்கிய ஒரு வாரத்திற்குள்ளாகவே மொபைல் வேலை செய்யாததால் கடைக்காரரிடம் சரி செய்ய கொடுத்துள்ளார். இது வெறும் சிறிய பிரச்சினை தான். உடனடியாக சரி செய்து தருகிறோம் என்று சொல்லி சரி செய்து கொடுத்து விட்டார்கள். 

ஆனால் மீண்டும் செல்போன் சரியாக வேலை செய்யாததால் கடைக்காரரை அணுகியுள்ளார். மீண்டும் அதே பிரச்சினை ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான கீதா தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். 

வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் மொபைல் கடையின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு பழுதான மொபைலின் விலையான ரூபாய் 3,055 மற்றும் ரூபாய் 30,000 நஷ்ட ஈடு மற்றும் வழக்கு செலவு தொகை ரூபாய் 5,000 ஆக மொத்தம் ரூபாய் 38,055-ஐ இரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் இல்லையென்றால் அத்தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9 % வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து

இதுJun 22, 2025 - 08:33:18 AM | Posted IP 172.7*****

குறைந்த விலை மொபைல்க்கு இவளவு 38,000 பணமா?? பணம் பறிக்க வேலையா ?

naan thaanJun 21, 2025 - 11:03:00 AM | Posted IP 104.2*****

really nice , but 2 months time is over

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory