» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் ரூ.1.5 லட்சம் மோசடி- வாலிபர் கைது!
புதன் 18, ஜூன் 2025 10:05:34 PM (IST)
தூத்துக்குடியில் ஆன்லைன் டிரேடிங்கில் அதிக லாபம் பெறலாம் என்று கூறி ரூ.1.5 லட்சம் பணத்தை மோசடி செய்தவரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு முகநூலில் பகுதி நேர வேலை வாய்ப்பு என விளம்பரம் வந்துள்ளது. அதனை நம்பி மேற்படி இளைஞர் அந்த மர்ம நபர்களை தொடர்பு கொண்ட போது அவர்கள் ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி ஒரு லிங்க் அனுப்பியுள்ளார். இதனையடுத்து அவர் அந்த லிங்க்-ஐ கிளிக் செய்து அதில் வந்த இணையள பக்கத்தில் மொத்தம் ரூ.1,50,000 பணத்தை முதலீடு செய்துள்ளார்.
பின்னர் மேற்படி இளைஞர் முதலீட்டிற்கான லாபம் வரவில்லை என்று அந்த மர்ம நபர்களை தொடர்பு கொண்டபோது அவர்கள் கூடுதலாக பணத்தை கட்டினால்தான் முதலீடு மற்றும் அதற்கான லாப பணத்தை எடுக்க முடியும் என்று வற்புறுத்தியுள்ளனர். பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த மேற்படி இளைஞர் இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.
மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி கோவில்பட்டியை சேர்ந்த ஜமாலுதீன் (30) ஆகியோர் மேற்படி இளைஞரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் எதிரி ஜமாலுதீன் என்பவரை இன்று (18.06.2025) கைது செய்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)

இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் : ஆட்சியர் தகவல்
திங்கள் 30, ஜூன் 2025 12:19:27 PM (IST)

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்
ஞாயிறு 29, ஜூன் 2025 11:28:11 AM (IST)

naan thaaanJun 21, 2025 - 11:13:53 AM | Posted IP 162.1*****