» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் 8.4 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

புதன் 18, ஜூன் 2025 8:35:36 PM (IST)



தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த  3 பேரை போலீசார் கைது செய்தனர். 8 கிலோ 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்  ஜான் உத்தரவின்படி  நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன்  தலைமையிலான தனிப்படை போலீசார் மற்றும் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு)  யேசுராஜசேகரன், சார்பு ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் இன்று (18.06.2025) ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அம்பேத்கர் நகர் சந்திப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் தூத்துக்குடி நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் முருகன் (எ) டியோ முருகன் (27), ரஹ்மத்துல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த ராமநாதன் மகன் கோவிந்தராஜா (எ) கோபி (23) மற்றும் பூபாண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் சடைமாரியப்பன் (23) என்பதும் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனடியாக போலீசார் மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த மொத்தம் 8 கிலோ 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து

naan thaanJun 21, 2025 - 11:10:19 AM | Posted IP 104.2*****

அப்டியே அந்த நிக்குற 9 பேரு மொகரகட்டையும் மறச்சு தொலைக்க வேண்டியது தானே ... அவ்ளோ மறைமுக உதவி பண்றீங்க ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory