» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மோட்டார் பைக்கில் 2½ கிலோ கஞ்சா கடத்தியவர் கைது
புதன் 28, மே 2025 8:47:25 AM (IST)
குளச்சலில் மோட்டார் பைக்கில் 2½ கிலோ கஞ்சா கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில், போதைப் பொருள் இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில் அதனை ஒழிக்கும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையிலும், ரோந்துப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் பல்வேறு இடங்களில் போதைப்பொருள்கள் சிக்கி வருகின்றன.
இந்தநிலையில் குளச்சல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லியோன் தலைமையிலான போலீசார் குளச்சல் பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் மடக்கி பிடித்து விசாரித்தினர். விசாரணையில் அவர் முன்னுக்குபின் முரணாக பேசினார்.
இதையடுத்து மோட்டாா் சைக்கிளை சோதனை செய்தபோது அதில் ஒரு பிளாஸ்டிக் கவரில் 2½ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் வாணியக்குடி அருகே உள்ள பனவிளையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (50) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை எங்கிருந்து கடத்தி வந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

அரசு ரப்பர் கழகத்தோட்டத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க கூடாது: சீமான் வலியுறுத்தல்!
சனி 13, டிசம்பர் 2025 11:58:37 AM (IST)

குமரி மாவட்டத்தில் 1025 மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான ஆணை
சனி 13, டிசம்பர் 2025 10:33:38 AM (IST)

குமரியில் 100 வயதை கடந்த வாக்காளர்கள் 35பேர் உள்ளனர்: ஆட்சியர் அழகுமீனா தகவல்!
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:50:25 PM (IST)

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவக்காற்று: காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:31:00 PM (IST)

தூத்துக்குடியில் சட்டமன்ற பொது தேர்தல் பணிகள் : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு
வியாழன் 11, டிசம்பர் 2025 4:49:45 PM (IST)


.gif)