» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மதுபோதையில் குளத்தில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி மரணம்!

சனி 17, மே 2025 3:44:44 PM (IST)



நாகர்கோவில் அருகே மதுபோதையில் குளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள கோட்டாறு கம்பளம் பகுதியில் மதுரையை சேர்ந்த செல்வராஜ் (30), சாட்டை அடித்துக் கொண்டு தர்மம் எடுத்து வந்தார். இவர் நேற்று மாலை குடிபோதையில் வடிவீஸ்வரம் நீராளி கரை குளத்தில் குளிப்பதற்காக இறங்கிய போது தவறி விழுந்து மரணம் அடைந்துள்ளார். 

குளிக்க சென்றவர் இரவு 7 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை என்பதால் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் நேற்று இரவு வரை தேடுதல் பணி நடந்தது. குளத்தில் போதுமான அளவு வெளிச்சம் இல்லாததால் தேடுதல் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

பின்னர் இன்று காலை மீண்டும் தீயணைப்பு துறையினர் தேடுதல் பணியில் துரிதமாக செயல்பட்டு 15 நிமிடங்களுக்குள் குளத்தில் கிடந்தவரை பிணமாக மீட்டனர். இவருக்கு சாந்தி (28) என்ற மனைவியும்  5 வயது, மற்றும் 9 வயதில் இரண்டு மகன்களும் 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory