» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் சுற்றுலா பயணி காரில் 15 பவுன் நகை திருட்டு: போலீஸ் விசாரணை

சனி 17, மே 2025 11:01:27 AM (IST)

குமரியில் சுற்றுலா வந்த சென்னை தனியார் நிறுவன ஊழியரின் காரில் இருந்த 15 பவுன் நகை மற்றும் பணப்பையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை தனியார் நிறுவன ஊழியர் அழகிய நம்பி (56). சில நாட்களுக்கு முன் இவர் குடும்பத்தினருடன் நாகர்கோவிலில் நடந்த திருமண விழாவில் பங்கேற்க காரில் வந்தனர். திருமணத்தில் பங்கேற்ற பின் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். திரிவேணி சங்கமம் கடற்கரை காந்தி மண்டபம் அருகே உள்ள கார் பார்க்கிங்கில் காரை நிறுத்தி விட்டு கடற்கரைக்கு சென்றனர். திரும்பி வந்த போது காரில் இருந்த கைப்பையை காணவில்லை. 

அதில் 15 பவுன் நகைகள், ரூ.26 ஆயிரம் இருந்துள்ளது. அதன் மதிப்பு ரூ.4 லட்சத்து 65 ஆயிரமாகும். அழகிய நம்பி கொடுத்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார், பார்க்கிங் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அழகிய நம்பி அவசரத்தில் கார் கதவை லாக் செய்யாமல் சென்றதை கவனித்து மர்மநபர்கள் கைப்பையை திருடியது தெரிந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory