» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கொத்தனார் மர்ம மரணம்: 8 ஆண்டுகளுக்கு பின் மனைவி கள்ளக்காதலனுடன் கைது!
சனி 17, மே 2025 10:58:37 AM (IST)
களியக்காவிளை அருகே கொத்தனார் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் அவரது மனைவியும் கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மடிச்சல் நுள்ளிக்காட்டுவிளையைச் சேர்ந்த கொத்தனார் சிவக்குமார் 35. இவரது மனைவி ஷீஜா 21. இரு மகன்கள் உள்ளனர். 2017 அக்., 14 சிவக்குமார் மர்மமான முறையில் வீட்டில் தூக்கில் இறந்து கிடந்தார். அவரது தாயார் சாந்தா களியக்காவிளை போலீசில் புகார் செய்தார். சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்தனர். உடற்கூறு ஆய்வு முடிவில் அவரது நான்கு விலா எலும்புகளில் காயமும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததும் தெரிய வந்தது.
இந்நிலையில் எஸ்.பி., ஸ்டாலின் சந்தேக மரணங்கள் தொடர்பான வழக்குகள் விசாரணையை தீவிரப்படுத்த உத்தரவிட்டிருந்தார். அதையடுத்து சிவக்குமார் இறந்த வழக்கையும் போலீசார் சில நாட்களாக தீவிரமாக விசாரித்தனர். அப்போது தான் ஷீஜாவும் அவரது கள்ளக்காதலன் ஏழிலும் சேர்ந்து சிவக்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 8 ஆண்டுகளுக்கு பின் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ஷுஜாவின் கள்ளக்காதல் விவகாரம் சிவக்குமாருக்கு தெரியாது. அவர் குடிபோதையில் தினமும் வீட்டுக்கு வந்து கலாட்டா செய்ததால் ஷீஜாவுக்கு அவர் மீது வெறுப்பு இருந்தது. இதனால் கள்ளக்காதலன் எழிலுடன் சேர்ந்து சிவக்குமாரை கொலை செய்ய ஷீஜா திட்டமிட்டார். சம்பவத்தன்று வழக்கம்போல் குடிபோதையில் வந்து சிவக்குமார் ஷீஜாவிடம் தகராறு செய்தார். எழிலை வீட்டுக்கு வரவழைத்து இருவரும் சேர்ந்து தாக்கி தலையணையால் சிவக்குமாரின் முகத்தில் அமுக்கி கொலை செய்தனர். அவர் தற்கொலை செய்ததாக ஷீஜா அழுது புரண்டு அனைவரையும் நம்ப வைத்துள்ளார்.
கணவர் இறந்த சில நாட்களுக்குள் ஷீஜா மகிழ்ச்சியாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனிக்குடித்தனமும் நடத்தினார். இந்த தகவல் விசாரணையில் தெரிந்து கைது செய்தோம் என்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)
