» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருநெல்வேலி ஷாலிமார் ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க விஜய் வசந்த் எம்பி கோரிக்கை
சனி 17, மே 2025 10:28:32 AM (IST)
திருநெல்வேலி ஷாலிமார் வாரந்திர ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும் என்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ரயில்வே வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதத்தில் விஜய் வசந்த் எம்பி வலியுறுத்தினார்.
திருவனந்தபுரத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் தலைமையில் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ள ரயில்வே வளர்ச்சி திட்டங்கள் குறித்து நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பயன்படும் முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றி தரவேண்டும் என எடுத்துரைத்தேன். நிலுவையில் உள்ள பணிகள் குறித்து விவாதித்து விரைவில் நிறைவேற்றி தர வேண்டும் என பேசினேன்.
விஜய்வசந்த் பேசியதாவது : நாகர்கோவில் சந்திப்பு, நாகர்கோவில் டவுன், இரணியல் மற்றும் குழித்துறை ரயில் நிலையங்களில் நடைபெற்று வரும் பணிகளை விரைவில் முடித்து, இங்கு பயணிகளுக்கான வசதிகளை பெருக்க வேண்டும்.கன்னியாகுமரி ரயில் நிலையத்தின் பின்புறம் பயணிகள் வெளியேற வாயில் அமைக்க வேண்டும்.
நான்கு வழி சாலையில் அருகே பயணிகள் வெளியேற ரயில் நிலையத்தில் பின்புறம் (கிழக்கு பக்கம்) எஸ்கலேட்டர் & லிஃப்ட் அமைத்து மற்றொரு வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் அதனால் பயணிகள் செல்லுவதற்கு எளிதாக இருக்கும். இரயில் நிலையம் முன்பக்கத்திலிருந்து பின்பக்கத்திற்கு 4 வழி சாலை வரை அகலப்படுத்தப்பட்ட சர்விஸ் சாலை அமைக்க வேண்டும்.
நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்திலிருந்து 4 வழி சாலையை இணைக்கும் வகையில் புதிய சாலை ஒன்றினை அமைக்க ரயில்வே நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்திடம் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில், திருநெல்வேலி இடையே MEMU பராமரிப்பு பணிகளுக்கென பணிமனை அமைக்க முன்வர வேண்டும். கப்பியறை, ஒழுகினசேரி, நாகர்கோவில், பள்ளியாடி மற்றும் நுள்ளிவிளை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலம் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
கண்டன்விளை, கொக்கோடு, வடுகன்பற்று ஆகிய பகுதிகளில் ரயில்வே மேம்பாலம்/சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். வட்டவிளையில் 1 வருடத்திற்கு முன்பே ரயில்வே நடைபாதை அகற்றப்பட்டது, எனவே பயணிகள் ரயில் பாதையின் குறுக்கே சிரமப்படுகிறார்கள், விரைவாக 2 மீட்டர் அகலத்தில் மக்கள் நடந்து செல்ல நடைபாதை விரைவாக அமைத்து தர வேண்டும்.
பாசன நீர் கொண்டு செல்ல ரயில்வே பாலங்களின் மீது அமைக்கப்படும் உயர்நிலை கால்வாய்கள் விவசாய நிலங்களுக்கு சென்றடையும் வகையில் அமைக்க வேண்டும்.
ரயில்களை நீட்டிக்க கோரிக்கை:
திருவனந்தபுரம் – மங்களூர் விரைவு ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும். நாகர்கோவில் தாம்பரம் விரைவு ரயில் திருவனந்தபுரம் வரை நீட்டிக்க வேண்டும்.
திருவனந்தபுரம் நாகர்கோவில் பாசஞ்சர் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும். ஷிர்டி – சென்னை வாரந்திர ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும். மதுரை பெங்களூர் வந்தே பாரத் ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும். திருநெல்வேலி ஷாலிமார் வாரந்திர ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும். ஹவ்ரா திருச்சி ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்.
ஹைதராபாத் சென்னை சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும். தாம்பரம் நாகர்கோவில் ரயிலை தினமும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவனந்தபுரம் திருநெல்வேலி இடையே மெமு ரயில் சேவையை அதிகரிக்க வேண்டும்.சென்னை கன்னியாகுமரி இடையே படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலை அறிமுகம் செய்ய வேண்டும்.
கூடுதல் நிறுத்தங்கள்
திருநெல்வேலி ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் மற்றும் நாகர்கோவில் காந்தி தாம் ரயில்களை குழித்துறை ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை வேண்டும். மதுரை புனலூர் ரயில் பள்ளியாடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை தேவை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
பொது மேலாளர் பேசும் போது: கன்னியாகுமரி ரயில் நிலையத்தின் பின்புறம் பயணிகள் வெளியேற வாயில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மற்றும் இரணியல் சுரங்கப்பாதை நிறைவேற்றி தருவதாகவும், மேலும் தேவையான இடங்களில் மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், ரயில் நிறுத்தங்கள், ரயில் நீட்டிப்பு சேவையை பரிசிலினை செய்வதாக கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)
