» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் புதிய பேருந்து சேவைகள்: அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்

வெள்ளி 16, மே 2025 4:53:42 PM (IST)



குமரி மாவட்டத்தில் மகளிர் விடியல் பயணமாக மாறவிருக்கும் கட்டண பேருந்துகள், ஆன்மீக மற்றும் சுற்றுலா பேருந்து சேவைகளை அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி, நாகர்கோவில் மண்டலத்தின் சார்பில் வடசேரி பேருந்து நிலையத்தில் மகளிர் விடியல் பயணமாக மாறவிருக்கும் கட்டண பேருந்துகள், ஆன்மீக மற்றும் சுற்றுலா பேருந்து சேவைகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கைகள் நிறைவேற்றும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் இன்று (16.05.2025) துவக்கி வைத்து வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடையே தெரிவிக்கையில்-தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து தரப்பட்ட பொதுமக்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறார்கள். அதனடிப்படையில் தரமான மற்றும் நம்பகத்தன்மை கொண்ட போக்குவரத்து சேவையினை வழங்கி வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட மகளிர் விடியல் பயணம் மகளிர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) நாகர்கோவில் மண்டலத்தில் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு 441 நகர பேருந்துகளும், 298 புறநகர் பேருந்துகளும் என மொத்தம் 739 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இப்பேருந்துகளில் நாளொன்றுக்கு சுமார் 9,31,604 பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். நாகர்கோவில் மண்டலத்தில் இயக்கப்படும் 441 நகர பேருந்துகளில் 319 நகர பேருந்துகள் "மகளிர் விடியல் பயண பேருந்துகளாக" இயக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 07.05.2021 அன்று முதல் கையெழுத்துயிட்ட முத்தான திட்டங்களில் மகளிர் விடியல் பயணம் திட்டத்தில் நாகர்கோவில் மண்டல பேருந்துகளில் சுமார் 3.25 இலட்சம் மகளிர் கட்டணமில்லாமல் தினந்தோறும் மகிழ்ச்சியுடன் பயணம் செய்கின்றனர். இத்திட்டம் பெண்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

அனைத்து மகளிர் விடியல் பயண பேருந்துகளிலும் பெண்கள் இன்முகத்தோடு பயணிக்கும் நிலையை காண முடிகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி கோட்ட பேருந்துகளில் மாநிலத்திலேயே தினமும் 76 சதவீதத்திற்கும் அதிகமாக பெண்கள் கட்டணமில்லா பயணம் செய்கின்றனர். மேலும், சுய உதவி குழுக்களின் மகளிர் உறுப்பினர்கள் சுமார் 25 கிலோ எடை உள்ள பொருட்களை நகர பேருந்துகளில் இலவசமாகவும், சாதாரண புறநகர் பேருந்துகளில் 100 கிலோமீட்டர் வரை இலவசமாகவும் கொண்டு செல்கின்றனர்.

அதன்ஒருபகுதியாக இன்று நமது கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் சிரமமில்லமால் பயணம் மேற்கொள்ள 35/B செண்பகராமன்புதூர் முதல் ஆசாரிபள்ளம், 4A-TSS நாகர்கோவில் முதல் கேசவன்புதூர், 39-V நாகர்கோவில் முதல் பிள்ளைத்தோப்பு, 4B/B-V நாகர்கோவில் கடுக்கரை முதல் காட்டுப்புதூர், 4V நாகர்கோவில் முதல் கீரிப்பாறை, 4B -V நாகர்கோவில் கடுக்கரை முதல் காட்டுப்புதூர், 31VV/F பார்வதிபுரம் முதல் பார்வதிபுரம், 14E/V நாகர்கோவில் முதல் முட்டம், 11A/A நாகர்கோவில் முதல் தக்கலை, 4A/B நாகர்கோவில் முதல் கேசவன் புதூர், 30 V/B நாகர்கோவில் முதல் ராஜாவூர், 

5B/14EV நாகர்கோவில் முதல் குளச்சல், 4C -TSSC நாகர்கோவில் முதல் அருமநல்லூர், 31VV/B பார்வதிபுரம் முதல் பார்வதிபுரம், 37/A நாகர்கோவில் முதல் மணக்குடி, 14E நாகர்கோவில் முதல் கடியப்பட்டணம், 37V நாகர்கோவில் முதல் மணக்குடி, 38CV நாகர்கோவில் முதல் புத்தன் துறை, 33D தேரூர் முதல் தாழக்குடி, 2/A கன்னியாகுமரி முதல் வடசேரி, PCG-2 சின்னமுட்டம் முதல் வடசேரி, 1B/V கன்னியாகுமரி முதல் வடசேரி, 5TSS நாகர்கோவில் முதல் மேற்குநெய்யூர், 5B-TSS நாகர்கோவில் முதல் சைமன்காலனி, 5/B-V நாகர்கோயில் முதல் குளச்சல், 5A/A-TSS குளச்சல் முதல் தக்கலை வரையும்,

5GV/B நாகர்கோவில் முதல் சைமன் காலனி, 5A/5G-TSS சைமன் காலனி முதல் தக்கலை, 11A/V நாகர்கோயில் முதல் மருதூர்குறிச்சி, 5GV/B நாகர்கோவில் முதல் சைமன் காலனி, 13D/C தக்கலை முதல் பெருஞ்சாணி, 12 நாகர்கோவில் முதல் திங்கள் நகர், 89C/B-VV மார்த்தாண்டம் முதல் குளச்சல், 89C/D மார்த்தாண்டம் முதல் அருமனை, 89B-TSS மார்த்தாண்டம் முதல் பெருஞ்சாணி, TSS-H-NA மார்த்தாண்டம் முதல் ஹெலன்நகர், 86/C மார்த்தாண்டம் முதல் பேணு, 87E/A மார்த்தாண்டம் முதல் கருங்கல், 46A/B TSS மார்த்தாண்டம் முதல் திங்கள்நகர்,87/D மார்த்தாண்டம் முதல் தேங்காய்பட்டணம், 83A மார்த்தாண்டம் முதல் இரையுமன் துறை, 

82J மார்த்தாண்டம் முதல் இரையுமன் துறை, 82B/B மார்த்தாண்டம் முதல் கொல்லங்கோடு, 46G தக்கலை முதல் கருங்கல், 87A/B மார்த்தாண்டம் முதல் இணயம், 84 மார்த்தாண்டம் முதல் மணிவிளை, 85k மார்த்தாண்டம் முதல் செண்பகதரிசு, 85 B மார்த்தாண்டம் முதல் பனச்சமூடு, 86/B மார்த்தாண்டம், பத்துக்காணி முதல் ஆலஞ்சோலை, 85GV V மார்த்தாண்டம் முதல் பனச்சமூடு என 52 கட்டண பேருந்து சேவைகளை மகளிர் விடியல் பயண பேருந்து சேவையாக மக்கள் பயன்பாட்டிற்கு இன்று கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி கோட்டம், நாகர்கோவில் மண்டலத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காகவும், ஆன்மீக பயணம் மேற்கொள்ளவும் காலை 8.00 மணிக்கு கன்னியாகுமரி பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், திருவட்டார் ஆதிகேசவன் கோவில், திற்பரப்பு மாஹாதேவர் கோயில் தரிசனம் செய்து திற்பரப்பு அருவியை சுற்றிப் பார்த்துவிட்டு மாலை 5.00 மணிக்கு கன்னியாகுமரி ரயில் நிலையத்திற்கும், மாலை 5.15 மணிக்கு கன்னியாகுமரி பேருந்து நிலையம் வந்தடையும் வகையில் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களை இணைக்கும் வகையில் பேருந்து ஏற்பாடு செய்ய கோரிக்கை வைத்ததனடிப்படையில், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கன்னியாகுமரி பேருந்து நிலையத்தில் காலை 8.00 மணிக்கு புறப்பட்டு, பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டி பாலம், திற்பரப்பு அருவி, பேச்சிப்பாறை சென்று சுற்றிப்பார்த்துவிட்டு மாலை 5.00 மணிக்கு கன்னியாகுமரி ரயில் நிலையத்திற்கும், 5.15 மணிக்கு கன்னியாகுமரி பேருந்து நிலையம் வந்தடையும் வகையில் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆன்மீகம் மற்றும் சுற்றுலா பேருந்துகளில் நடத்துனரே வழிகாட்டியாக செயல்படுவார்கள். 

இவ்விரு சுற்றுலாக்களுக்கும் தலா ரூ.350 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே வெளிநாடு மற்றும் உள்நாடு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இப்பேருந்து சேவைகளை பெற்று தங்கள் சுற்றுலாவினை மகிழ்ச்சியுடன் களித்திட கேட்டுக்கொள்கிறேன். இச்சேவையினை கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அளித்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களுக்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஆன்மீகவாதிகள், பொதுமக்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவர் என்.சுரேஷ் ராஜன், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், போக்குவரத்து கழக பொது மேலாளர் பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சிலதா, போக்குவரத்து கழக துணை மேலாளர் ஜெரோலின், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜன், மண்டல தலைவர்கள் ஜவஹர், அகஸ்தீனா கோகிலவாணி, இந்துசமய அறங்காவலர் குழு தலைவர் (சுசீந்திரம்) பிரபா ஜி இராமகிருஷ்ணன், நாகர்கோவில் மாநகராட்சி உறுப்பினர்கள் மோனிகா விமல், கௌசி, கலாராணி, முன்னாள் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் சரவணன், பூதலிங்கம் பிள்ளை, துறை அலுவலர்கள், ஓட்டுநர்கள், நடத்துகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory