» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இரட்டை வழக்கில் ஜாமீனில் வந்த மண்டல மாநகர் தலைவருக்கு உற்சாக பாஜக வரவேற்பு!

வியாழன் 1, மே 2025 6:29:47 PM (IST)



நாகர்கோவிலில் இரட்டை வழக்கில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த பாஜக வடக்கு மண்டல மாநகர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் பாஜக வடக்கு மண்டல மாநகர் தலைவராகவும், நாகர்கோவில் மாநகராட்சியின் 12- வது வார்டு மாமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து வருபவர் வடசேரி வெள்ளாளர் கீழத் தெருவை சேர்ந்த சுனில் குமார் . இவர் மீது வடசேரி காவல் துறையினர் வடசேரி வணிகர் தெருவில் மாநகராட்சி அனுமதி இன்றி திடீர் என்று ஆட்டோ நிறுத்தம் மற்றும் பெயர் பலகை நிறுவப்பட்டதை சுனில் குமார் மற்றும் சுந்தர் ஆகியோர் பெயர் பலகையை சேதப்படுத்தியதாக கூறி ஒரு வழக்கு பதியப்பட்டது. 

தற்போது மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் அனுமதியின்றி ஆட்டோ நிறுத்தம் செயல்பட்டதாகவும், மற்றும் பெயர் பலகை வைத்ததாக கூறி மாநகராட்சி மூலம் ஆட்டோ நிறுத்தம், மற்றும் பெயர் பலகை அப்பகுதியில் இருந்து மாற்றப்பட்டது குறிப்பிடதக்கது. 

மேலும் காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த சுற்றுலா பயணிகளை சுட்டு கொன்ற பயங்கரவாதிகளை கண்டித்தும் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வகையில் பிளக்ஸ் பேனர் வைத்திருந்ததில் (முஸ்லிம் பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டு இருந்தாகவும் இதனால் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பிளக்ஸ் பேனர் வைத்ததாக கூறி வடசேரி காவல் துறையினர் மேலும் ஒரு வழக்கை சுனில் குமார் மீது பதிந்தனர். 

இதனால் இந்த இரு வழக்கிலும் இருந்தும் நேற்று நாகர்கோவில் நீதி மன்றம் சுனில் குமாருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஜாமீனில் வெளியே வந்த சுனில் குமாருக்கு பாஜக தொண்டர்கள் சால்வை அணிவித்து உற்ச்சாக வரவேற்ப்பளித்தனர் . சுனில் குமார் மீது வடசேரி காவல் துறையினரால் தொடர்ந்து புணையப்படும் வழக்கு குறித்து இது வரையிலும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில் சுனில் குமார் வாகனத்தில் (சொகுசு காரில்) கட்டப்பட்டு இருந்த பாஜக கட்சி கொடியினை வடசேரி பகுதி பாஜகவை சேர்ந்த இளைஞர்கள் அகற்றினர். 

பாரதிய ஜனதா கட்சியில் பதவி வகித்து கொண்டிருக்கும் மாநகர் தலைவருக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில் அடிமட்ட உறுப்பினர்களின் நிலையை சிந்தித்து பார்க்க முடியாது என்று புலம்பி வருகின்றனர். நகரில் பாஜக கொடியுடன் வலம் வரும் வடக்கு மண்டல மாநகர் தலைவரின் வாகனத்தில் பாஜக கொடி அகற்றப்பட்டு இருப்பது கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியையும் , பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory