» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஹஜ் யாத்திரை சிறப்பு தடுப்பூசி முகாம்: உடல் தகுதி சான்றுகள் வழங்கப்பட்டது!

திங்கள் 28, ஏப்ரல் 2025 4:00:56 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹஜ் புனித யாத்திரைக்கு செல்லும் யாத்திரகளுக்கான பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் வழிக்காட்டுதலின்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள இருக்கும் ஹஜ் யாத்திரிகள் 65 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட சுகாதாரத்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இதற்கான தடுப்பூசி முகாம் இன்று (28.04.2025) கிருஷ்ணன்கோவில் மாவட்ட சுகாதார அலுவலக, தடுப்பூசி கூடத்தின் மேல்மாடியில் வைத்து நடைபெற்றது. இம்முகாமில் அரசு பொதுநல மருத்துவர்கள் கலந்துகொண்டு உடல் தகுதி பரிசோதனைகள் மேற்கொண்டு உடல் தகுதி சான்றுகள் வழங்கப்பட்டது. 

இம்முகாமில் தமிழ்நாடு அரசால் கன்னியாகுமரி மாவட்டதிற்கு ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளவதற்காக அனுமதி பெற்ற பயனாளிகளுக்கு QMMV (மெனிஞ்ஜோகொக்கல் மெனிஞ்ஜிட்டிஸ் தடுப்பூசி) மற்றும் SIV (சீசனல் இன்ப்ளூயன்சா தடுப்பூசி) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. மூன்று வயதிலிருந்து 65 வயது வரை உள்ள ஹஜ் பயணிகளுக்கு QMMV மற்றும் போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டது. 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு SIV, QMMV மற்றும் போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory