» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 10:30:25 AM (IST)
நாகர்கோவில் பயோனியர் குமாரசுவாமி கல்லூரியில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலனை முன்னிட்டு நிர்வாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 26.04.2025, சனிக்கிழமை அன்று நாகர்கோவில் பயோனியர் குமாரசுவாமி கல்லூரியில் வைத்து காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடத்தப்படவுள்ளது.
டிவிஎஸ், டாடா பவர், கேப் ஸ்டார்ட், ஃபின்ஓஎஸ், அக்லூட் இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், கம்மா போன்ற முன்னணி தனியார் நிறுவனங்களோடு, கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்ககளில் உள்ள 20-ற்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 200க்கும் மேற்பட்ட மென்பொருள் பயிற்சியாளர்/டெவலப்பர், UI/UX வடிவமைப்பு, ஜாவா/PHP முழு அடுக்கு மேம்பாடு, டேட்டா சயின்ஸ், AI, டிஜிட்டல் மார்க்கெட்டிங், டிசைனர், வணிக மேம்பாட்டு நிர்வாகி, சந்தைப்படுத்தல் நபர், வீடியோ எடிட்டிங், கிராஃபிக் டிசைனிங், மார்க்கெட்டிங், அப்ரெண்டிஸ்ஷிப், பில்லிங், கோடவுன் பணியாளர்கள், ஹவுஸ் கீப்பிங், வணிக மேம்பாட்டு பணி, நிர்வாக ஒருங்கிணைப்பாளர், வாடிக்கையாளர் தொடர்பு, போன்ற பணியிடங்களுக்கு மாற்றுத்திறன் கொண்ட பணியாளர்களை தேர்வு செய்யவும், திறன்பயிற்சி வழங்கவும் உள்ளனர். மாற்றுத்திறன் கொண்ட இளைஞர்கள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவதுடன், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இலவசமாக வழங்கும் பல்வேறு பயனுள்ள சுயதொழில், வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சிகள் மற்றும் வங்கி கடன் பெறுதல் போன்ற விவரங்களயும் தெரிந்துகொண்டு பயன் பெறலாம்.
நிறுவனங்கள் மற்றும் அவை தேர்வு செய்ய முன்வந்துள்ள பணிநிலைகள், ஊதிய விவரம், தேவை படும் கல்வி தகுதி/ உடற்தகுதி மற்றும் வயது வரம்பு போன்ற விவரங்கள் https://docs.google.com/spreadsheets/d/1IlkhKip_SZzmPvnndI3CALxQNpVLbRtYzy2Zs598tjU/edit?gid=0#gid=0 என்ற இணைய வழி பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு மற்றும் திறன்பயிற்சிகள் பெற விருப்பம் கொண்ட 20-40 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தற்காப்பு கலை பயிற்சி - ஆராய்ச்சி மையம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
செவ்வாய் 6, மே 2025 11:18:58 AM (IST)

கொடி நாள் நன்கொடை வசூல்: குமரி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுநர் பாராட்டு சான்றிதழ்!
திங்கள் 5, மே 2025 4:37:05 PM (IST)

நாகர்கோவில் - கோட்டயம் தினசரி ரயில் திருவாரூர் வரை நீட்டிப்பு: பயணிகள் கோரிக்கை!
ஞாயிறு 4, மே 2025 9:23:14 PM (IST)

திண்டுக்கல் – நாகர்கோவில் சிறப்பு ரயில் நாளை முதல் இயக்கம் : தென்னக ரயில்வே தகவல்
ஞாயிறு 4, மே 2025 8:53:11 PM (IST)

வணிக நிறுவனங்கள் மே 15க்குள் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
சனி 3, மே 2025 5:08:01 PM (IST)

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு!
சனி 3, மே 2025 12:41:52 PM (IST)
