» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பங்குனி உத்திர விழா எதிரொலி : குமரி மாவட்டத்தில் பூக்களின் விலை உயர்வு

வியாழன் 10, ஏப்ரல் 2025 12:31:16 PM (IST)



பங்குனி உத்திரத்தை ஒட்டி கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான பங்குனி உத்திர விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தோவாளை மலர் சந்தையில் பிச்சிப்பூ கிலோ ரூ.2500-க்கு விற்பனை ஆகிறது. மல்லிகை பூ கிலோ 1000 ரூபாய்க்கும், அரளி பூ 500க்கு விற்பனை ஆகிறது. பூக்களின் தேவை அதிகரிப்பால் வியாபாரிகளும், பொதுமக்களும் பூக்களை ஆர்வமுடன் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory