» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் ரூ.120 கோடியில் பணிகள் : மீனவர் நலன் ஆணையர் ஆய்வு
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 8:36:02 PM (IST)

தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.120 கோடி மதிப்பில் அகல தடுப்பு சுவர் அமைக்கும் பணிகளை மீன்வளர்ச்சிதுறை மற்றும் மீனவர் நலன் ஆணையர் ஆர்.கஜலெட்சுமி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் சின்னமுட்டம். அழிக்கால், பிள்ளைத்தோப்பு, இரையுமன்துறை, தேங்காய்பட்டணம் உள்ளிட்ட துறைமுக பகுதிகள், கடற்கரை பகுதிகள் மற்றும் அப்பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில், மீன்வளர்ச்சிதுறை மற்றும் மீனவர்நலன் ஆணையர் ஆர்.கஜலெட்சுமி, இன்று (08.04.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசானது மீனவ மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருவதோடு, அருகாமையில் உள்ள அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் சிறையில் உள்ள அப்பாவி மீனவர்களை மீட்கும் நடவடிக்கையில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மீனவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
மேலும் மீன்பிடி தடைக்காலங்களில் மீன்பிடித்தொழிலில் ஈடுப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்திற்கு மீனவ நிவாரணத்தொகை, மானிய விலையில் எரிபொருட்கள், கடனுதவிகள், மீன்வலை, தூண்டில் வளைவுகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டம் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் வழங்கப்பட்டு வருகிறது
தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடற்கரை கிராமத்தினை கடலிரிப்பிலிருந்து பாதுகாத்திடவும், மீனவர்களின் படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், தூண்டில் வளைவுகளுடன் கூடிய அலை தடுப்புசுவர் மற்றும் மீன் ஏலக்கூடம், மீன் பண்ணைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க இன்று (08.04.2025) கன்னியாகுமரி சின்னமுட்டம் துறைமுகத்தினை ஆய்வு மேற்கொண்டு, சின்ன முட்டம் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் மீன்பிடித்து திரும்புகிறார்களா என துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்தில் உள்ள மீன்பிடி முறைகள், பிடித்து வரும் மீன்கள், மீன்பிடி தொழிலில் அன்றாடம் சந்தித்து வரும் பிரச்சனைகள், சின்னமுட்டம் மீன்பிடிதுறைமுகத்திலுள்ள கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த உருவாக்கப்பட வேண்டிய கட்டமைப்பு வசதிகள் குறித்தும், மீன்பிடி துறைமுகத்தில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் மற்றும் சில கூடுதல் பணிகள் மேற்கொள்வது குறித்து துறை அலுவலர்களுடன் கேட்டறியப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அழிக்கால், பிள்ளைத்தோப்பு கடற்கரை பகுதிகள் ஆய்வு மேற்கொள்ளபட்டு, தடுப்பணை கட்டுவதற்கான திட்ட வரைவுகள் தயாரிக்குமாறு மீன்வளத்துறை துணை இயக்குநர், உதவி இயக்குநர்கள், செயற்பொறியார்கள் உள்ளிட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் இரையுமந்துறை மற்றும் தேங்காய்பட்டணம் துறைமுக பகுதிகளில் வசிக்கும் கடலோரபகுதி மீனவ குடும்பங்களின் நலனை கருத்தில் கொண்டு, இரையுமன்துறை மற்றும் தேங்காய்பட்டணம் துறைமுகத்திற்குட்பட்ட கடலோர பகுதிகளில் ரூ.120 கோடி மதிப்பில் அலை தடுப்பு சுவர் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் பார்வையிட்டதோடு, அந்த கடலோரப்பகுதிகளில் மீனவர்கள் வந்து செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இரையுமன் துறை, தேங்காய்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மீன் ஏலக்கூடங்கள், மீன் பதப்படுத்தும் நிலையங்களை நேரில் பார்வையிடப்பட்டது. மீன்பிடித்துறைமுக விரிவாக்க பணிகளை டிசம்பர் 2025க்குள் முடித்து மீனவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகளில் பயோ கழிவறை எனப்படும் கழிவறை இல்லாததால் மீனவர்களின் சிரமத்திற்குள்ளதாகவும், கடலில் தவறி விழுந்து உயிரிழப்பிற்கு காரணமாகவும் இருப்பதால் மீன்பிடி விசைப்படகுகளில் பயோ கழிவறை அமைக்க துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து தேங்காய்ப்பட்டணம் மீன்பிடித்துறைகத்தின் கட்டுமான பணிகள் ஆய்வு மேற்கொள்ளபட்டதோடு, புதிதாக கட்டப்பட்டுள்ள மீன் ஏலக்கூடாரத்தை பயன்படுத்துவதற்கு ஒரு தற்காலிக பாதை அமைத்து, மின்விளக்குகள் வசதி ஏற்படுத்திடவும், மீன்பிடித்துறைமுகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாட்டுப்படகுகளுக்கான தளத்தில் நாட்டு படகுகள் நிறுத்தும் போது உராய்வு ஏற்பட்டு பாதிக்காத வண்ணம் கொக்கிகள் அமைத்து டயர்களை பொருத்துமாறும் உதவி செயற்பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் மீனவர் நலனில் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு முழுஒத்துழைப்பு வழங்குமாறு மீனவர்கள், மீனவ பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மீன்வளர்ச்சிதுறை மற்றும் மீனவர் நலன் ஆணையர் ஆர்.கஜலெட்சுமி தெரிவித்தார்.
நடைபெற்ற ஆய்வுகளில் கூடுதல் இயக்குநர் ஆறுமுகம், மீன்வளத்துறை துணை இயக்குநர் சின்னகுப்பன், கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர், உதவி இயக்குநர்கள் மகேஷ் ஸ்டாலின், விஜில் கிராஸ், தீபா, உதவி செயற்பொறியாளர்கள் அரவிந்த் குமார், செல்வராஜ், பிரேமலதா, அலுவலர்கள், மீனவ பிரதிநிதிகள் சியால், பேபி ஜாண், கிறிஸ்டோபர், பிபின், ஜோஸ், சேசு அடிமையை, பிராங்கிளின், இராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தற்காப்பு கலை பயிற்சி - ஆராய்ச்சி மையம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
செவ்வாய் 6, மே 2025 11:18:58 AM (IST)

கொடி நாள் நன்கொடை வசூல்: குமரி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுநர் பாராட்டு சான்றிதழ்!
திங்கள் 5, மே 2025 4:37:05 PM (IST)

நாகர்கோவில் - கோட்டயம் தினசரி ரயில் திருவாரூர் வரை நீட்டிப்பு: பயணிகள் கோரிக்கை!
ஞாயிறு 4, மே 2025 9:23:14 PM (IST)

திண்டுக்கல் – நாகர்கோவில் சிறப்பு ரயில் நாளை முதல் இயக்கம் : தென்னக ரயில்வே தகவல்
ஞாயிறு 4, மே 2025 8:53:11 PM (IST)

வணிக நிறுவனங்கள் மே 15க்குள் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
சனி 3, மே 2025 5:08:01 PM (IST)

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு!
சனி 3, மே 2025 12:41:52 PM (IST)
