» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
போதைப் பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: ஆட்சியர் அழகுமீனா உத்தரவு!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 4:53:25 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்த கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தலைமையில் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல் துறை உட்பட பல்வேறு துறைகளின் சார்பில் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் சட்ட ஒழுங்கு குறித்த கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் "கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உடனுக்குடன் வழக்கு பதிவு செய்து, உண்மையான குற்றவாளிகளை கைது செய்து மேல்நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து காவல்நிலையங்களில் உள்ள ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்கள்.
மேலும் பெற்றோருக்கு தெரியாமல் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்லும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் குறித்து புகார் தெரியவந்தால் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட பல்வேறு போதைப்பொருட்கள் நடமாட்டத்தில் உள்ளது.
தடைசெய்யப்பட்ட இதுபோன்ற போதைப்பொருட்கள் விற்பவர்களை கண்டறிந்து மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிவுறுத்தப்படுவதோடு, போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் இளைஞர்களை கைது செய்து, அவர்களை சீர்திருத்த சிறைகளுக்கு அனுப்பி தக்க மனநல ஆலோசனை வழங்கவும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தபட்டது.
அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தை தாண்டி மதுவிற்கும் மதுபான உரிமையாளர்கள் மற்றும் பார் உரிமையாளர்கள் மீது வழக்குபதிவு செய்து மேல் நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களின் கடை உரிமங்களை ரத்து செய்திட உதவி ஆணையர் கலால் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து மாவட்டத்தில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களையும், உரிய அனுமதி சீட்டு இல்லாமல் கனிமங்களை கொண்டு செல்கின்ற வாகனங்களை கண்டறிந்து, வாகனங்களை கைப்பற்றி வாகன உரிமையாளர்கள் மீது தகுந்த காவல்துறை நடவடிக்கை எடுக்குமாறும் அரசு துறை அலுவலர்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தபட்டது என ஆட்சியர்தெரிவித்தார்.
கூட்டத்தில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகிதா, உதவி ஆணையர் கலால் ஈஸ்வர நாதன், மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன், வட்டாட்சியர்கள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தற்காப்பு கலை பயிற்சி - ஆராய்ச்சி மையம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
செவ்வாய் 6, மே 2025 11:18:58 AM (IST)

கொடி நாள் நன்கொடை வசூல்: குமரி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுநர் பாராட்டு சான்றிதழ்!
திங்கள் 5, மே 2025 4:37:05 PM (IST)

நாகர்கோவில் - கோட்டயம் தினசரி ரயில் திருவாரூர் வரை நீட்டிப்பு: பயணிகள் கோரிக்கை!
ஞாயிறு 4, மே 2025 9:23:14 PM (IST)

திண்டுக்கல் – நாகர்கோவில் சிறப்பு ரயில் நாளை முதல் இயக்கம் : தென்னக ரயில்வே தகவல்
ஞாயிறு 4, மே 2025 8:53:11 PM (IST)

வணிக நிறுவனங்கள் மே 15க்குள் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
சனி 3, மே 2025 5:08:01 PM (IST)

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு!
சனி 3, மே 2025 12:41:52 PM (IST)
