» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மார்த்தாண்டம் பேருந்து நிலையத்திற்கு மார்ஷல் நேசமணி பெயர்: அமைச்சர் கே.என்.நேரு

செவ்வாய் 8, ஏப்ரல் 2025 12:35:47 PM (IST)



மார்த்தாண்டம் பேருந்து நிலையத்திற்கு மார்ஷல் நேசமணி பெயர் சூட்ட முதல்-அமைச்சர் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய, விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட், மார்த்தாண்டம் பேருந்து நிலையத்திற்கு மார்ஷல் நேசமணி பெயரை வைக்க அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, "தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினால் முதல்-அமைச்சர் அனுமதி பெற்று பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory