» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
திங்கள் 7, ஏப்ரல் 2025 5:38:31 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 806 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டது.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டத்தை சார்ந்த ஜாண் பிரிம்சன் என்பவர் பணியில் இருந்தபோது கடந்த 14.07.2024 அன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்ததற்காக அன்னாரது மனைவி நீத்து பிரிம்சன் அவருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2.50 இலட்சத்திற்கான காசோலையினையினையும்,
முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் முன்னாள் படைவீரர்களின் மனைவியரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் மின்மோட்டர் பொருத்தப்பட்ட இலவச தையல் இயந்திரம் 3 பயனாளிகளுக்கும், மாநில சட்டத்துணவு திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆசாரிப்பள்ளம் புனித மிக்கேல் தொடக்கப்பள்ளி சத்துணவு மையத்தில் சமையலராக பணிபுரிந்து கடந்த 16.12.2023 அன்று பணியின் போது காலமான அருள் பாத்திமா என்பவரது மகள் ஆன்சி பவுலின் என்பவருக்கு கோட்டார் புனித சேவியர் உயர்நிலைப்பள்ளி சத்துணவு மையத்தில் சத்துணவு அமைப்பாளராக கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சேக் அப்துல்காதர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கருணாவதி (சத்துணவு), துணை காவல் கண்காணிப்பாளர் பிச்சை, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சிவகாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தூர் ராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மோகனா, துணை இயக்குநர் முன்னாள் படைவீரர் மேஜர் ஜெயகுமார், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)
