» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அருமனை அருகே நர்சிங் மாணவி திடீர் மரணம் : போலீசார் விசாரணை
வெள்ளி 28, மார்ச் 2025 8:18:56 PM (IST)
அருமனை அருகே நர்சிங் மாணவி திடீரென இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குமரி மாவட்டம், அருமனை அருகே பிலாக்காடு, சூட்டூர்கோ ணம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் ராஷிகா (18). இவர் தலக்குளம் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் நர்சிங் முதலாம் ஆண்டு விடுதியில் தங்கி பயின்று வந்தார். இந்நிலையில் ராஷிகாவுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக தலைவலி ஏற்பட்டு வாந்தியும் இருந்ததாக தெரிகிறது. இதைத்தொ டர்ந்து ராஷிகா தனது வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் நிலைமையை கூறியுள்ளார்.
இதையடுத்து ராஷிகாவை பெற்றோர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு ராஷிகாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு நோய்கள் எதுவும் இல்லை என கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு சாப்பாடு முடிந்து ராஷிகா தூங்கி உள்ளார். இன்று காலையில் ராஷிகா எந்த அசைவும் இல்லாமல் மயங்கிய நிலையில் இருந்தார்.
உடனடியாக அவரை பெற்றோர்கள் மீட்டு குலசேகரம் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஷிகாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனை அறிந்த ராஷிகாவின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக அருமனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நர்சிங் மாணவி திடீரென இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தற்காப்பு கலை பயிற்சி - ஆராய்ச்சி மையம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
செவ்வாய் 6, மே 2025 11:18:58 AM (IST)

கொடி நாள் நன்கொடை வசூல்: குமரி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுநர் பாராட்டு சான்றிதழ்!
திங்கள் 5, மே 2025 4:37:05 PM (IST)

நாகர்கோவில் - கோட்டயம் தினசரி ரயில் திருவாரூர் வரை நீட்டிப்பு: பயணிகள் கோரிக்கை!
ஞாயிறு 4, மே 2025 9:23:14 PM (IST)

திண்டுக்கல் – நாகர்கோவில் சிறப்பு ரயில் நாளை முதல் இயக்கம் : தென்னக ரயில்வே தகவல்
ஞாயிறு 4, மே 2025 8:53:11 PM (IST)

வணிக நிறுவனங்கள் மே 15க்குள் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
சனி 3, மே 2025 5:08:01 PM (IST)

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு!
சனி 3, மே 2025 12:41:52 PM (IST)
