» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கோடை கால நீச்சல் பயிற்சி வகுப்புகள் ஏப்.1ஆம் தேதி துவக்கம் - ஆட்சியர் தகவல்
புதன் 26, மார்ச் 2025 11:57:18 AM (IST)
நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்க நீச்சல் குளத்தில் கோடை கால நீச்சல் பயிற்சி வகுப்புகள் ஏப்.1ஆம் தேதி துவங்க உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கன்னியாகுமரி மாவட்ட பிரிவு சார்பில் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் முதற்கட்டமாக 01.04.2025 முதல் 08.06.2025 வரை ஐந்து கட்டங்களாக நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்க நீச்சல் குளத்தில் வைத்து நடைபெறவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கும் என தனித்தனியே நடத்தப்படவுள்ளது.
முதல் கட்டம் - 01.04.2025 - 13.04.2025 விடுமுறை நாட்கள் 07.04.2025
இரண்டாம் கட்டம் - 15.04.2025 – 27.04.2025 விடுமுறை நாட்கள் 21.04.2025
மூன்றாம் கட்டம் - 29.04.2025 – 11.05.2025 விடுமுறை நாட்கள் 05.05.2025
நான்காம் கட்டம் - 13.05.2025 – 25.05.2025 விடுமுறை நாட்கள் 19.05.2025
ஐந்தாம் கட்டம் - 27.05.2025 – 08.06.2025 விடுமுறை நாட்கள் 02.06.2025
இப்பயிற்சி முகாமானது காலை 6-7, 7-8, 8-9 மணி மற்றும் மாலை 4-5, 5-6 மணிவரை சிறுவர், சிறுமியர் மற்றும் பெரியவர்களுக்கும் காலை 11-12 மணிக்கு மட்டும் பெண்களுக்கு என தனித்தனியே நடத்தப்படவுள்ளது. நீச்சல் பயிற்சி முகாமின் அம்சங்கள் நீச்சல் தெரியாதவர்களுக்கான நீச்சல் பயிற்சி, நீச்சல் தெரிந்தவர்களுக்கான சிறப்பு நீச்சல் பயிற்சி, உடல் எடை குறைவதற்கான நீச்சல் பயிற்சி என தனித்தனியே பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சிக்கான கட்டணமாக சரக்கு மற்றும் சேவை வரியுடன் ரூ.1770 ஆகும். பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது கட்டணத்தினை கடன் அட்டை (Credit card) பற்று அட்டை (Debit card) அல்லது ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) மூலம் ஆன்லைன் பண பரிமாற்றம் செய்யவும், மற்றும் ஆதார் அட்டையினை கொண்டு வர வேண்டும். இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு 04652 – 262060, 74017 03507 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

அரசு ரப்பர் கழகத்தோட்டத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க கூடாது: சீமான் வலியுறுத்தல்!
சனி 13, டிசம்பர் 2025 11:58:37 AM (IST)

குமரி மாவட்டத்தில் 1025 மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான ஆணை
சனி 13, டிசம்பர் 2025 10:33:38 AM (IST)

குமரியில் 100 வயதை கடந்த வாக்காளர்கள் 35பேர் உள்ளனர்: ஆட்சியர் அழகுமீனா தகவல்!
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:50:25 PM (IST)

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவக்காற்று: காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:31:00 PM (IST)

தூத்துக்குடியில் சட்டமன்ற பொது தேர்தல் பணிகள் : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு
வியாழன் 11, டிசம்பர் 2025 4:49:45 PM (IST)


.gif)