» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
செவ்வாய் 6, ஆகஸ்ட் 2024 5:11:42 PM (IST)

தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் ரூ.253 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா இன்று (06.08.2024) தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் "கன்னியாகுமரி மாவட்டம் கடல்சீற்றம் மற்றும் பேரிடர் காலங்களில் அதிகளவு கடலரிப்பு ஏற்பட்டு, தடுப்பு சுவர்கள் சேதமடைந்துள்ளதை நேரில் பார்வையிடபட்டது. மேலும் துறைமுக முகத்துவாரத்தில் மணல் திட்டுகளினால் அதிகளவு உயிர்பலிகள் மற்றும் மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளது.
எனவே தேங்காய்ப்பட்டணம் துறைமுக முகத்துவாரத்தில் படித்துள்ள மணல் திட்டுகளை அப்புறப்படுத்தி முகத்துவாரத்தினை நீட்டி தர வேண்டுமென்று சட்டமன்ற உறுப்பினர்கள், மீனவர்கள், மீனவ சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கோரிக்கை வைத்திருந்தனர். இக்கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் மீனவர்களின் உற்ற நண்பனாக இருந்து, தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தினை சீரமைத்திட நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
அதனடிப்படையில் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக பணியானது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் உள்ள முத்தான திட்டமாகும். ரூ.60.00 கோடி (பகுதி 1), ரூ.77.00 கோடி (பகுதி II), ரூ.116.00 கோடி (பகுதி III) என 3 கட்டகளாக இத்துறைமுக பணியானது ரூ.253.00 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது.
அதனைத்தொடர்ந்து தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இரயுமன்துறை பகுதியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள துறைமுக திட்ட கோட்ட கட்டுமானப்பணிகளின் தற்போதைய நிலையினை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறியப்பட்டதோடு, குறிப்பாக, தேங்காப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தின் மேற்கு அலைதடுப்புச்சுவர் நீட்டிப்பு பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், இரயுமன்துறை பகுதியிலிருந்து வள்ளத்தின்மூலம் பயணித்து தாமிரபணி முகத்துவார பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இனையம் மற்றும் தூத்தூர் மண்டல விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளை ஆய்வு செய்யப்பட்டது. பின்பு தேங்காப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தினுள் மீன்கள் இறக்குதள வசதிகள் மற்றும் இதர கட்டுமான வசதிகளையும் நேரடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மீனவ பிரதிநிதிகள், மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் தேங்காய்பட்டணம் துறைமுக பணியை விரைந்து முடிக்க தேவையான கற்கள் சீரிய முறையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். துறைமுக முகத்துவாரம் மற்றும் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் மணல் திட்டுகளை அகற்றி ஆழப்படுத்த வேண்டும். ரூ.33.75 கோடி மதிப்பீட்டில் இறையுமன்துறை பகுதியில் அரசாணை பெறப்பட்ட பணியினை உடனே தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளார்கள். இக்கோரிக்கையினை பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
ஆய்வின் போது, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் ம.சின்னக்குப்பன், உதவி இயக்குநர் (தேங்காய்பட்டினம்) அஜித் ஸ்டாலின், மற்றும் தேங்காப்பட்டினம் மீன்பிடி துறைமுக திட்ட உட்கோட்ட அலுவலர் செல்வராஜ், அலுவலர்கள், மீனவ பிரதிநிதிகள், மீனவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு தேதி மாற்றம்: ஆட்சியர் அறிவிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:52:13 PM (IST)

நாகர்கோவில் அருகே சாலை மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்த ஆம்னி பஸ்; 13 பேர் காயம்
திங்கள் 15, டிசம்பர் 2025 7:46:19 AM (IST)

நாகர்கோவில்-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் புதிய பெட்டிகளுடன் முதல் பயணத்தை துவங்கியது
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:03:13 PM (IST)

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

அரசு ரப்பர் கழகத்தோட்டத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க கூடாது: சீமான் வலியுறுத்தல்!
சனி 13, டிசம்பர் 2025 11:58:37 AM (IST)

குமரி மாவட்டத்தில் 1025 மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான ஆணை
சனி 13, டிசம்பர் 2025 10:33:38 AM (IST)


.gif)