» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கல்

செவ்வாய் 6, ஆகஸ்ட் 2024 4:14:36 PM (IST)



தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகைக்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாட்கோ சார்பில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தெரிவிக்கையில் தாட்கோ மூலம் தூய்மைப் பணியாளர் நலவாரிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்ட வெள்ளிமலை, கப்பியறை, ஆற்றூர், வெள்ளிச்சந்தை மற்றம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் குழந்தைகளில் 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ படிக்கும் 10 மாணவர்களுக்கு தலா ரூ.1000 வீதமும், மேலும் 12ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு பயிலும் 11 மாணவர்களுக்கு தலா ரூ.1500 வீதம் தூய்மைப்பணியாளர்களின் குழந்தைகள் 21 பேருக்கு மொத்தம் ரூ.26,500-க்கான காசோலை வழங்கப்பட்டது. 
அதனைத்தொடர்ந்து PMAJAY கடன் திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்புக்காக கடன் கோரி விண்ணப்பித்த கல்குளம் வட்டம் மேல்பாறை, கண்டன் விளை பகுதியை சார்ந்த ஷீலா மற்றும் சரண்யா பிரியா ஆகிய 2 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000 வீதம் ரூ.1 இலட்சம் மானியம் வழங்கப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்கள். இந்நிகழ்வில் தாட்கோ மேலாளர் தெய்வகுருவம்மா, தாட்கோ உதவி மேலாளர் பாரதி உள்ளார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory