» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பறக்கும் படை சோதனையில் ரூ.1½ கோடி தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்!

சனி 23, மார்ச் 2024 5:26:28 PM (IST)

நாகர்கோவிலில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் சுமார் ரூ.1½ கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. மேலும் பணம் மற்றும் பொருட்கள் பட்டுவாடா செய்வதை கண்டறியும் வகையில் பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தை பொறுத்தவரை கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. எனவே மாவட்டத்தில் 18 தேர்தல் பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளது. தற்போது கூடுதலாக 5 பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தக்கலை அருகே புலியூர்குறிச்சி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்

அப்போது அந்த வழியாக ஒரு பிக்கப் வேன் வந்தது. அந்த வேனை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வேனில் தங்க, வெள்ளி நகைகள் இருந்தன. ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதனையடுத்து நகைகளை வேனுடன் பறிமுதல் செய்த அதிகாரிகள், திருவட்டார் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

அங்கு வருமான வரித்துறை அதிகாரி செல்வராஜ் தலைமையிலான பணியாளர்கள் விடிய விடிய விசாரணை நடத்தியதில் அந்த வேனில் 2½ கிலோ தங்க நகைகளும் 4 கிலோ வெள்ளி நகைகளும் இருப்பது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.1½ கோடிக்கு மேல் இருக்கும் என தெரிகிறது.

அந்த நகைகள் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடையில் இருந்து உரிய ஆவணமின்றி கோயம்புத்தூர் பகுதியில் உள்ள மற்றொரு நகைக்கடைக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.

இதனையடுத்து வருமான வரித்துறையினர் உரிய ஆவணங்களை சமர்பித்து எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தினர். தற்போது நகைகளுடன் அந்த வேனை பறிமுதல் செய்து போலீஸ் பாதுகாப்புடன் தாலுகா அலுவலகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

இதற்கிடையில் நாகர்கோவில் வடசேரி குறிஞ்சி பஜார் பகுதியில் ரூ. 1 லட்சத்து 22 ஆயிரம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் இன்று காலை வரை ரூ.36 லட்சத்து 23 ஆயிரத்து 372 ஆவணங்களின்றி கொண்டு சென்றதாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory