» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

முதலமைச்சர் இளைஞர் மாநில விருதுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் தகவல்

வியாழன் 25, ஏப்ரல் 2024 3:13:49 PM (IST)

முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு தகுதியானவர்கள்  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியினை அங்கீகரிக்கும் பொருட்டு "முதலமைச்சர் மாநில இளைஞர் விருது" ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1,00,000 ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவை உள்ளடக்கியதாகும்.

அதன்படி, 2024ம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர்வரும் 15.08.2024 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படவுள்ளது. இவ்விருது தொடர்பாக கீழ்க்காணும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

1. 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண் மற்றும் பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் 1, 2023 (01.04.2023) அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் மற்றும் மார்ச் 31, 2024 (31.03.2024) அன்று 35 வயதுக்குள்ளதாக இருத்தல் வேண்டும்.

2. கடந்த நிதியாண்டில் (2023-24) அதாவது 01.04.2023 முதல் 31.03.2024 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

3. விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். (சான்று இணைக்கப்பட வேண்டும்)

4. விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

5. மத்திய ஃ மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் ஃ  கல்லூரிகள் ஃ பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.

6. விண்ணப்பதாரருக்கு உள்ளுர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கிற் கொள்ளப்படும்.

7. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 01.05.2024 முதல் கடைசி நாள் 15.05.2024 அன்று மாலை 4 மணி ஆகும்.

விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணைய தளமான www.sdat.tn.gov.in ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

ஜெய சூரியன்Apr 26, 2024 - 11:30:49 AM | Posted IP 172.7*****

நான் ஏற்றுக்கொள்கிறேன்

JeyasuryanApr 26, 2024 - 11:30:25 AM | Posted IP 162.1*****

நான் ஏற்றுக்கொள்கிறேன்

JeyasuryanApr 26, 2024 - 11:29:59 AM | Posted IP 172.7*****

நான் ஏற்றுக்கொள்கிறேன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory