» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கனிமொழி எம்பியை எதிர்ப்பவர்கள் டெபாசிட் இழப்பார்கள் : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

திங்கள் 18, மார்ச் 2024 5:26:29 PM (IST)

தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து போட்டியிடும் நபர்கள் டெபாசிட் இழக்க சுவாமிதோப்பில் வேண்டிக்கொண்டேன் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுவாமிதோப்பில் சாமி தரிசனம் செய்த பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேர்தலில் ஏதாவது ஆகிவிட்டால் குடியரசு துணைத் தலைவர் பதவி தருவார்கள் என தமிழிசை நினைக்கிறார். தமிழிசை விஷயம் தெரியாமல் களத்தில் இருக்கிறார். தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து போட்டியிடும் நபர்கள் டெபாசிட் இழக்க வேண்டிக்கொண்டேன் என்றார்.

தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தனது பதவியை ராஜிநாமா செய்தவதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மக்களவைத் தேர்தலில் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி சார்பில் மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதேபோல், தமிழகத்திலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 39 தொகுதிகளிலும் களம் காண்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட தமிழிசை செளந்தரராஜன் பாஜக தலைமையில் விருப்பம் தெரிவித்தாக சில நாள்களுக்கு முன் தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory