» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றம்: கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு

வியாழன் 7, டிசம்பர் 2023 12:44:17 PM (IST)

பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்படுவதால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும், மலையோரப் பகுதிகளிலும் கன மழை பெய்ததால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது. ஏற்கெனவே பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் முழுக் கொள்ளவை எட்டும் நிலையில் உள்ளதால் அணைகளின் நிலவரம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

பேச்சிப்பாறை அணையிலிருந்து தொடா்ந்து 512 கன அடி நீா் உபரியாக வெளியேற்றப்பட்டு வருவதால், கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரப் பகுதி பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 45.37 அடியாக உள்ளது, 

அணைக்கு 1235 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது, அணையிலிருந்து மதகுகள் வழியாக 510 கன அடி நீரும், உபரியாக 512 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 73.76 அடியாக உள்ளது. அணைக்கு 605 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது,அணையிலிருந்து 250 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது.

18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு 1 அணையின் நீா்மட்டம் 16.40 அடியாக உள்ளது அணைக்கு 130 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது, அணையிலிருந்து 100 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது. முக்கடல், மற்றும் மாம்பழத்துறையாறு அணைகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory