» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 8, மே 2025 5:15:12 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து கழகத்தின் சார்பில் நாகர்கோவில் கன்கார்டியா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தனியார் பள்ளி மற்றும் கல்வி நிறுவன வாகனங்களை ஆய்வு மேற்கொள்ளும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (08.05.2025) நேரில் பார்வையிட்டு தெரிவிக்கையில்- தமிழ்நாடு முழுவதும் பள்ளி வாகனங்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்குகிறதா? என ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம் என 2 வட்டார போக்குவரத்து அலுவலங்கள் உள்ளன. இவ்வலுவலகங்களில் நாகர்கோவில் வட்டார போக்குவரத்திற்கு கீழ் உள்ள தனியார் பள்ளிகளின் வாகனங்களின் தரம் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதனடிப்படையில் நாகர்கோவில் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட 120 பள்ளிகளில் 435 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 22 பாதுகாப்பு அம்சங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. அதன்படி இன்று பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அவற்றில் அவசரகால பாதை உள்ளதா? தீயணைப்பு கருவி உள்ளதா? படிக்கட்டின் உயரம் அரசு விதிமுறைக்கு உட்பட்டு உள்ளதா?, முதலுதவி சிகிச்சை பெட்டியுள்ளதா?, வாகனங்களின் முன்பக்கம் மற்றும் பின்பக்கங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளதா, வேக கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் பள்ளி வாகனங்களில் முறையாக கடைபிடிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. இதில் சீரமைப்புக்காக சில வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் பள்ளி வாகனங்களில் குழந்தைகளை பத்திரமாக ஏற்றி செல்ல வேண்டும். வாகன ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்த கூடாது. சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். ஓட்டுநர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டும். சீட் பெல்ட் போட்டு வாகனம் ஓட்ட வேண்டும் என ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆய்வின்போது ஏதாவது குறைபாடுகள் கண்டறியப்பட்டால் 15 நாட்களுக்குள் சரி செய்து அனுமதி பெற்ற பிறகு தான் வாகனங்களை இயக்க வேண்டும். பள்ளி வாகனங்களில் குறைபாடுகள் இருந்தால் மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்களால், வாகனங்களில் தீ அபாயம் ஏற்பட்டால் அவற்றை எவ்வாறு கையாள வேண்டுமென்றும், தீயணைப்பு கருவியை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்தும் ஓட்டுநர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. ஆய்வில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, உதவி காவல் கண்காணிப்பாளர் லலித்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல், வாகன ஆய்வாளர்கள், துறை அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள், வாகன ஓட்டுநர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 5:36:19 PM (IST)

கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வெள்ளி 4, ஜூலை 2025 10:40:08 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)
