» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இன்ஸ்டாகிராமில் பழகி சிறுமியை பாலியல் தொழில் ஈடுபடுத்த முயற்சி: 4பேர் கைது!

புதன் 7, மே 2025 5:12:36 PM (IST)



இன்ஸ்டாகிராமில் பழகி 14 வயது சிறுமியை பாலியல் தொழில் ஈடுபடுத்த முயன்றதாக கோவையைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் கோவையைச் சேர்ந்த சக்தி என்பவர் பழகி வந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக இருவரும் பழகிய நிலையில் காதலிப்பதால் சிறுமியை நேரில் பார்க்க ஆசையாக இருப்பதாக கூறி தனிமையில் சந்திக்க வேண்டும் என அழைத்துள்ளார். முதலில் சிறுமி மறுத்தாலும் அவர் வற்புறுத்தியதை தொடர்ந்து குமரி மாவட்டத்திற்கு வந்தால் சந்திக்கலாம் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து சக்தி கோவையில் இருந்து தனது நண்பர்கள் சந்தோஷ், பரத், தோழிகளான வளையாபதி, மஞ்சுளா ஆகியோருடன் கன்னியாகுமரி ஓட்டலில் தங்கி சிறுமியை அங்கு அழைத்துள்ளனர். இதை நம்பி கன்னியாகுமரிக்கு சென்ற சிறுமியை ஆசை வார்த்தை கூறி கோவை அழைத்து செல்ல முயன்றுள்ளனர். அதற்காக பணம் தேவை இருப்பதாக கூறி சிறுமி அணிந்திருந்த ஒன்றேகால் பவுன் நகையை கழற்றி விற்பனை செய்துள்ளனர்.

இந்நிலையில்மகளை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் எனக்கூறி புதுக்கடை போலீசில் புகார் செய்தனர். போலீசார் சிறுமியின் அலைபேசி எண் மூலம் அவர் கன்னியாகுமரியில் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்க முயன்றபோது கூட்டத்தில் இருந்த பரத் தப்பி ஓடினார். இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் இவர்கள் கோவையில் பாலியல் தொழில் செய்து வந்ததும், இளம்பெண்களை இன்ஸ்டா மூலம் பழக்கம் ஏற்படுத்தி பாலியல் தொழிலில் தள்ளி வந்ததும் தெரியவந்தது. விற்பனை செய்யப்பட்ட நகை மீட்கப்பட்டது. தப்பி ஓடிய பரத்தை போலீசார் தேடுகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory