» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கொடிநாள் நிதியை பொதுமக்கள் வாரி வழங்க வேண்டும்: ஆட்சியர் ஸ்ரீதர் வேண்டுகோள்!

வியாழன் 7, டிசம்பர் 2023 12:40:09 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்தில் படைவீரர் கொடிநாள் உண்டியல் வசூலினை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடி நாள் வசூலினை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், துவக்கி வைத்து தெரிவித்தாதவது: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ம் நாள் இந்தியா முழுவதும் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நாளில் அரசு முன்னாள் படைவீரர்களுக்கு, ஆற்றிய தொண்டுகளை நினைவு கூர்ந்து நன்றி பாராட்டி வருகிறது. 

கொடிநாளில் திரட்டப்படும் நிதியானது போர்க்களத்தில் உயிர்நீத்த படைவீரர்களின் கைம்பெண்கள், ஊனமுற்ற படை வீரர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரது விதவைகளின் மறுவாழ்விற்காகவும், நலத்திட்டங்களுக்காகவும் பயன்படுத்தப்படுவதால் பொது மக்கள் அனைவரும் நிதியுதவி வாரி வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார். 

இந்நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் மேஜர் வா.ஸ்ரீ.ஜெயகுமார் (ஓய்வு), நாகர்கோவில் வருவாய் கோட்டாசியர் சேது ராமலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் விமலா ராணி, அகஸ்தீஸ்வரம் வட்டாசியர் கண்ணன், அலுவலர்கள், பணியாளர்கள், முன்னாள் படை வீரர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory