» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரியில் இருந்து மிக்ஜாம் புயல் நிவாரண பொருட்கள் : ஆட்சியர் அனுப்பி வைத்தார்!
வியாழன் 7, டிசம்பர் 2023 10:12:33 AM (IST)

மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை குமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் அனுப்பி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி முகமை, நாகர்கோவில் மாநகராட்சி, பேரூராட்சிகள் உள்ளிட்ட துறைகளின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் அத்தியாவசிய உணவு பொருட்களை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், வாகனம் வாயிலாக பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அனுப்பி வைத்து வைத்தார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில்: கடந்த சனிக்கிழமை சென்னை வானிலை அறிக்கையில் ஏற்கனவே அறிவித்தப்படி மிக்ஜாம் புயலின் காரணமாக தமிழ்நாட்டுக்குட்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய 4 மாவட்டங்களில் கடும் மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் சார்பில் உதவும் வகையில் உடனடியாக மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்களான தண்ணீர், பிஸ்கெட், பால் பவுடர் மற்றும் பிரட் ஆகியவற்றினை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து சென்னைக்கு வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து நாளையும் அனுப்பி வைக்கப்படும். பொதுமக்கள், நல்உள்ளங்கள், தன்னார்வலர்கள், தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரும் உதவிட முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) சங்கரநாராயணன், புஹாரி (நிலம்), நாகர்கோவில் வருவாய் கோட்டாசியர் சேதுராமலிங்கம், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார், பேரிடர் மேலாண்மை வட்டாசியர் வினோத் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
வெள்ளி 9, மே 2025 4:00:54 PM (IST)

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்ய சிறப்பு முகாம்: ஆட்சியர்
வெள்ளி 9, மே 2025 3:44:06 PM (IST)

பிளஸ் 2 பொதுத் தேர்வில் குமரி மாவட்டம் 5 வது இடம்பெற்று சாதனை : ஆட்சியர் வாழ்த்து
வெள்ளி 9, மே 2025 10:12:02 AM (IST)

பிளஸ் 2 மாணவருடன் பள்ளி மாணவி ஓட்டம்? குமரி அருகே பரபரப்பு
வியாழன் 8, மே 2025 5:24:43 PM (IST)

குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 8, மே 2025 5:15:12 PM (IST)

தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 7, மே 2025 5:14:58 PM (IST)
