» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூய்மைப் பணியாளர்களின் நலன் காக்க நடவடிக்கை : ஏ.ஐ.டி.யூ.சி கோரிக்கை!
திங்கள் 25, செப்டம்பர் 2023 3:17:05 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களின் நலனுக்காக குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட குழு நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனு: மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சிகளில் சேவை கட்டணம் என்ற பெயரில் நிதி விரயத்தை தடுக்க ஒப்பந்தம், தினக் கூலி, சுய உதவி குழு நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியத்தை கணக்கில் கொண்டு அரசாணைக்கு குறைவான வழங்குகிறார்கள்.
பல வருடங்களாக பணிகளின் மூப்புரிமை குறித்து அறிய இயலவில்லை என்ற தகவலை கூறி அத்தகூலியாக உள்ளார்கள் தினக்கூலியும் இல்லை ஒப்பந்தகாரர் அரைகுறையாக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப் படுகிறது. மாவட்ட ஆட்சியர் வருடாந்திர ஒப்பந்த பணியாளர்களுக்கு நிர்ணயம் செய்த தொகை வழங்கப்படுவதாக தகவல் வழங்குகிறார்கள் ஆனால் எவ்வளவு ரூபாய் என்ற விபரம் தெரிவிப்பதில்லை ஒவ்வொரு பேரூராட்சியிலும் ஒவ்வொரு விதமாக சம்பளம் வழங்கப் படுகிறது.
இவர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை வருங்கால வைப்பு நிதி பிடித்தம் கிடையாது. இ.எஸ்.ஐ மருத்துவ வசதி கிடையாது. வேலைப்பளு அதிகம், ஆனால் குறைந்த சம்பளம். பணியிடத்தில் பாலியல் பேச்சு வேலைப்பழு, இழிவான பேச்சு, மிரட்டல் பேச்சு குறைகளை கேட்க கூட நாதி இல்லாத நிலையில் மன அழுத்தத்திற்கு உட்பட்டு வருகிறார்கள். தற்போதுகூட விளாத்திகுளம் புதூர் பேரூராட்சியில் 13 வருடமாக மேற்பார்வையாளர்களால் ஏற்பட்ட மன உளைச்சலால் விஷம் அருந்தி, உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து காப்பாற்றப்பட்டார்.
பல்வேறு உள்ளாட்சிகளில் குறைந்த நபர்களை வேலைக்கு வைத்து அதிகமான தூய்மை பணியாளர்கள் வேலை செய்வதாக கணக்கு காட்டி பணியாளர்கள் 'சம்பளத்தை சுரண்டுகிறார்கள். எனவே, தூய்மைப் பணியாளர்களின் குறைகளை தீர்க்க தூய்மை பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளடக்கிய தூய்மை பணியாளர்கள் குறை தீர்க்கும் நாள் என்று மூன்று மாதத்திற்கு ஒரு முறை தங்கள் முன்னிலையில் கூட்டம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
பகவதி ராஜன்Sep 26, 2023 - 09:21:54 AM | Posted IP 172.7*****
தூய்மை பணியாளர்களுக்கு முறையான சம்பளம் கிடைக்கவில்லை.கண்டிப்பாக மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி 2023ன் ஆண்டுபடி உள்ள ஊதியம் கிடைக்க வேண்டும்.( ஒப்பந்த முறையை ஒழித்தால் சீராக இருக்கும்).
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவிப்பு
புதன் 16, ஜூலை 2025 11:24:24 AM (IST)

எலக்ட்ரீசியன் கொலை வழக்கில் சிறுவன் உட்பட 5 பேர் கைது:பரபரப்பு வாக்குமூலம்
புதன் 16, ஜூலை 2025 10:50:48 AM (IST)

கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராஜர் 123–வது பிறந்தநாள் விழா: அமைச்சர் மரியாதை
செவ்வாய் 15, ஜூலை 2025 12:46:03 PM (IST)

திருமணம் செய்வதாக கூறி சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை!
செவ்வாய் 15, ஜூலை 2025 10:33:29 AM (IST)

நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் உள்பட ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்
செவ்வாய் 15, ஜூலை 2025 10:25:16 AM (IST)

ரேஷன் கடையில் ஆட்சியர் அழகுமீனா திடீர் ஆய்வு
திங்கள் 14, ஜூலை 2025 12:02:27 PM (IST)

R. ParamasivanSep 26, 2023 - 10:10:09 PM | Posted IP 172.7*****